கவிதைகள் (All)

சிரிப்பு

சிரிக்கனும் நல்லா சிரிக்கனும்

மறக்கனும் கவலை மறக்கனும்

 

[2]

 

முகமது அழகும் அகமது அழகும்

ஜெகமதில் துலங்கி பொலிவுரும் அதனால்

சிரிக்கனும் கவலை மறக்கனும்

 

 

அரு சுவை போலே நகை சுவையிருக்கும்

அடைகின்ற பேர்க்கே ஆனந்தம் கிடைக்கும்

சிரிக்கனும் கவலை மறக்கனும்

 

 

புன்னகை அதுவே பொன் நகையாகும்

மென்னகை நன்னகை தன்னகை கொண்டு

சிரிக்கனும் கவலை மறக்கனும்

 

சிரிப்பில் பல வித ராகங்கள் பிறக்கும்

சரி கம பதனி சங்கீதம் சுரக்கும்

சிரிக்கனும் கவலை மறக்கனும்

 

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்

வாய்மை குணமது நற்குணம் தோன்றும்

சிரிக்கனும் கவலை மறக்கனும்

 

நகை சுவை கூற்றில் நாலுமிருக்கனும்

பிறர் மனம் நோகாது நல்லது நவிலனும்

சிரிக்கனும் கவலை மறக்கனும்

 

 

வதனத்தில் சுருக்கம் சிரிப்பால் மறையும்

மனதிலும் புழுக்கம் அதனால் குறையும்

சிரிக்கனும் கவலை மறக்கனும்

 

டப்பா படமும் நகை சுவையாலே

டாப்புல போயி வெற்றியும் கானுது

சிரிக்கனும் கவலை மறக்கனும்

 

 

சிலரின் சிரிப்பு சங்கீதம் சொட்டும்

பலரின் சிரிப்பு சில்லறை கொட்டும்

சிக்கனும் கவலை மறக்கனும்

 

சிரிப்பால் பகையை துரத்தியடிப்போம்

நகை சுவை கொண்டு சினேகம் பிடிப்போம்

சிரிக்கனும் கவலை மறக்கனும்

 

உலக நகை சுவையாளரின் மன்றம்

சீரும் சிறப்பும் பேரும் புகழுமாய்

வளரனும் நல்லா மகிழனும்

சிரிக்கனும் நல்லா சிரிக்கனும்

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button