ஓஹோ மனிதக் குஉட்டமே
எதனை நோக்கி இந்த ஓட்டமே
மரணம் வருமே நினைவிருக்கா
மஹ்சர் மைதானம் மறந்திடுச்சா?
நாடியின் துடிப்பு நின்று விட்டால்
நம் பெயர் என்ன ‘மையத்து’ தானே
அழுதாலும் புரண்டாலும் திரும்ப வராது
ஒப்பாரி ஓலமெல்லாம் ஓரிரு நாளு
உடுப்பு துணியை மாற்றி வெள்ளைத் துணி
வாழ்ந்த மனுசனுக்கு ‘கசப்பு’ மாத்தி
வெளிநாட்டு மகன் வரணும் ‘தீதாரு’ பார்க்க
வெளியூரு சனம் வரணும் ஒப்பாரி வைக்க
ஐந்து பிள்ளைகளும் வரவேண்டும் இல்லையா
ஐஸ்பெட்டி வாங்கியாந்து அதனுள் வைத்து
அழுகிவிடாமல் பாதுகாத்து வையுங்கள்
அடுத்த நாள் வரையில் ஐஸ்பெட்டி உபசாரம்
வாழும் காலத்திலே வாய்க்கு சோறில்லை
வயிற்று பசியால் மாண்ட பெற்றோருக்கு
நாற்பது நாள் ‘ஹத்தம் – பாத்திஹா’ வாம்
நாளும் பொழுதும் நகர்ந்து விட்டால்
இன்றைய மகன் நாளைய தந்தை
இன்றைய இளைஞன் நாளைய முதியவன்
எல்லோருக்கும் காத்திருப்பது ஒரு விஷயம்
இன்றில்லையேல் நாளை வரும் ‘மௌத்து’
ஒப்பாரி வைத்து தீதாரு பார்த்து முடிந்ததும்
வெண்ணிற ஆடையில் ‘கஃபனிட்டு’
‘சந்தூக்’கு வரும் வரையில் காத்திருந்து
சவ ஊர்வலம் செல்லும் ‘கபர்ஸ்தான்’ வரை
ஆறு அடி நீளம் முஉன்று அடி அகலம்
ஐந்து அடி ஆழத்தில் அகலத்தின் பாதியில் ‘புல்லக் குழி’
அனைவரும் அறிவோம் அதுதான் ‘கப்ரு’ குழி
இறந்து போனவனின் இறுதி வீடு
மரணம் வந்தால் முடிந்து விட்டதா
மரணம்தான் இறுதிப் பயணமா
மரணம் வந்து சேரும் வரை
மனிதன் எப்படியும் வாழலாமா?
இப்படி ஓர் விதி இருந்திடின்
ஏழு ஜென்மம் இருந்திட்டாலும்
மனித ஜென்மம் திருந்தி வாழ வழியில்லை
மற்றோர் மதம் குஉறுவது போல்
மனிதன் செய்யும் பாவங்களை யெல்லாம்
மனிதனைப் படைத்திட்ட இறைவன்
தனது கணக்கிலே வரவு வைப்பதென்றால்
தள்ளாடித் தலைகவிழ்ந்து நின்று – அவன்
தானும் ஒரு பாவியாய் இருக்க நேரிடும்
தான்தோன்றித் தனமான வாழ்வே
தொடர்ந்து நிற்கும் மனித வாழ்வில்
துன்பமே மேலோங்கி வாழ்ந்து வரும்
மனிதனைப் புனிதனாக்க வேண்டும்
மண்ணில் தோன்றிய மதங்கள் அனைத்தின்
மகத்தான கோட்பாடு அதுதான்
மதங்கள் குஉறுவது ஓர் வழி என்றால்
இஸ்லாம் குஉறவதோ இன்னொரு வகையிலானது
இறைவன் அளித்த மார்க்கம் அல்லவா அது
என்னதான் குஉறுகிறது இந்த இஸ்லாம்
எல்லா மனிதர்களையும் ஏக காலத்திலே வசப்படுத்தியுள்ளதே?
இறைவன் அவன் அல்லாஹ் ஒருவன்தான்
இறைவன் மனிதர்கள் அனைவரையும் உலகிலே
அவனை ஓர்மையில் வணங்குவதற்காகவே படைத்தான்
அவன் ஆதி முதல் மனிதரை களிமண்ணால் படைத்தான்
அந்த முதல் மனிதருக்கு ‘ருஉஹை’ கொடுத்தான்
அவரின் துணைவியை அவரிடமிருந்து ஒரு எலும்பை எடுத்து
அவருக்காக துணைவியாய் படைத்தான்
அவர்கள் இருவரிலிருந்து மனிதக் குஉட்டத்தைப் படைத்தான்
மனிதர்கள் வாழ்நாள் முடிந்து மரணித்து
மீண்டும் இறைவனின் சன்னிதானம் வரவேண்டியவர்கள்
இறந்துவிட்ட மனிதர்களை உயிர்தந்து எழுப்பி
இகத்தில் அம்மனிதர் ஆற்றியவற்றை அவன் வினவிடுவான்
அந்தக் கேள்விகளுக்கும் கட்டளைகளுக்கும்
அடிபணிந்தே தீரவேண்டிய
அவகாசம் அளிக்கப்பட்டுள்ள வாழ்வுதான்
இந்த உலக வாழ்வு மனிதா உனக்கு
ஓ உலக மனிதர்களே என்று
ஒட்டுமொத்த மனிதகுலத்தை
நல்வழியின் பக்கம் அழைக்கிறது
நேர்வழியினை அறிவிக்கிறது இஸ்லாம்
முஸ்லிம் என்றாகிவிட்டால் போதுமா?
முஹமது, முஸ்தபா, அஹமது, அப்துல்லாஹ்
என்று பெயர்சூட்டிக் கொண்டால் போதுமா
இல்லை இல்லவே இல்லை
“மனிதர்களே சிந்திக்கும் செயல்படும்
மக்கள் குஉட்டம் உங்களிலே உண்டா?
வானத்தை விதானமாக ஆக்கினோம்
வையத்தை தங்குமிடமாக்கித் தந்திட்டோம்
வானங்களை ஏழு வானங்களாக வடிவமைத்தோம்
உங்களுக்கு அருகாமையில் இருக்கும் வானத்தை
நட்சத்திரங்களால் அலங்காரம் செய்தோம்
நீங்கள் வசிக்கும் ப+மியானது உங்களைக் கொண்டு
அசைந்து விடாமல் இருப்பதற்காக வேண்டி
அதிலே மலைகளை நட்டு வைத்துள்ளோம்
மண்ணிலே ஆறுகளை ஒலித்தோடச் செய்கிறோம்
மண்ணில் முளைப்பவை உருவத்திலும் சுவையிலும்
மாறுபட்டு இருப்பதை மனிதா நீ சிந்திக்க வில்லையா?
மேகக் குஉட்டங்களை ஒன்று திரட்டி
மழையாகப் பெய்விக்கிறோம்
அதன் முஉலம் காய்ந்த இப்ப+மி
அழகாய் வளம் பெறுகிறது
சூரியனும் சந்திரனும் தமக்குரிய பாதையில்
செவ்வனே பயணம் செய்விக்கப் பட்டுள்ளது
இவை யாருக்காகவும் ஒரு நொடியும் தாமதிக்காது
இரவு பகல் மாற்றம் இறைவனால் விதிக்கப்பட்டுள்ளது
இவை யாவும் மனிதா உனக்கு விளங்கவில்லையா?”
இவையனைத்தும் இறைமறை குர்ஆன் இயற்கை குறித்து
இயம்பிய சில வரிகளின் சாரமாகும்
மனித சமுஉகமானது அவகாசம் தரப்பெற்றது
மனிதனுக்கு ப+மியில் சிறிது காலம் தங்குமிடமும்
மண்ணக வாழ்வில் சிறிது காலம் சுகமனுபவித்தலும் உண்டு
மனிதனுக்கு இறைவனின் செய்தி கிடையப் பெற்றதும்
அவர்கள் நேர்வழிக்கு வந்துவிடுவார்கள்
அவர்கள் அல்லாஹ்வை மாத்திரம்
வணங்கி வழிப்பட்டு ஓரிறை வழி நடப்பர்
வரையறுக்கப் பட்டுள்ள வாழ்வை வாழ்வார்கள்
அவர்களின் பேச்சிலே, செயலிலே
அவர்களின் செலவினங்களிலே, சம்பாத்யத்திலே
அவர்களின் வியாபாரத்திலே, கொடுக்கல் வாங்கலிலே
அவர்களின் திருமணங்களிலே, உறவுகளிலே
ஒவ்வோர் அம்சத்திலும் முஸ்லிமாக இருப்பார்கள்
ஓரிறைவனின் வழி நடப்பார்கள்
அல்லாஹ்வின் வேதத்தையும் தூதர்களையும்
அவர்களின் வாழ்நாளெல்லாம் பின்பற்றுவார்கள்
அவர்கள் உண்மையான முஸ்லிம்கள்
அவர்களுக்கு கவலை இல்லை
அவர்கள் நேர்வழி யாளர்கள்
அவர்கள் தான் வெற்றியாளர்கள்
மரணம் – அது முடிவல்ல இன்னொரு துவக்கம்
மரணம் – மனித வாழ்வின் மற்றொரு படி
மரணம் – அதற்கு பின் வருவது நிரந்தர வாழ்வு
வாழ்நெறி வகுத்தளித்த இறைமறை வழி
வாழாது மனம்போன போக்கில் வாழ்ந்தோர்
வாழ்க்கை எல்லாம் கைசேதம்தான்
வாழ்நெறி வாழா உள்ளங்கள் வழிகேட்டில்தான்
கடைசி காலம்தானே வந்தால் பார்த்துக் கொள்ளலாம்
கடைசி நாள்வரை கண்டபடி வாழலாம்
கடைசி நாள் வந்ததும் கரையேறி விடலாம் -என்று
கண்முஉடித் தனமாக சிலர் நினையக் குஉடும்
யார் அறிவார் மரணவேளையை
எப்போது வரும் எப்படி வரும்
எத்தனை பாதுகாப்பு அரண்களுக்குள்
இன்பமாய் வாழ்ந்தாலும் மரணம் அது நிச்சயம் வரும்
எரித்தோ, எரிந்தோ, புதைத்தோ, புதைந்தோ போய்
இறந்த உடலை இறுதி மரியாதை செய்து
போய் சேர்ந்த பின்னால் என்னவாகும்
பாட்டின் கவிஞன் சொன்னது போன்று
வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ?
இறுதி கேள்விக்கான விடையை
இஸ்லாம் குஉறி விட்டது
இன்று நேற்று அல்ல
ஏறத்தாழ பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்
மரணித்தவன் மண்ணில் இடப்பட்ட பிறகு
மலக்குமார்கள் அவனிடத்து வந்திடுவர்
“மன் ரப்புக்க?; மன் தீனுக்க? ; மன் நபியுக்க? “
முதலாவதாய் கேட்கப்படும் இம்முஉன்று கேள்விகள்
உன் இறைவன் யார்?
உன் மார்க்கம் எதுவாக இருந்தது?
உன் வழிகாட்டி (நபி) யார்?
உண்டா பதில் இம்முஉன்று கேள்விக்கும்
உண்டு எனில் பின்வருமாறு
உந்தன் பதில்கள் அமைந்திட வேண்டுமே
அல்லாஹ்; இஸ்லாம் ; முஹம்மத் (ஸல்)
இம்முஉன்று பதில்கள் மட்டும் போதுமா?
உன் தொழுகை எப்படி?
உன் நோன்பு? ; உன் ஜகாத்?
வசதியாய் வாழந்தும் உன்னால் செய்யப்படாத
வாழ்வின் இறுதிக் கடமையாம் ஹஜ்?
அண்டை அயலாருடன் உன் நேசம் எப்படி?
உற்றார் உறவோரிடம் உன் பாசம் எப்படி?
செல்வந்தனே உன் செல்வம் வந்தது எப்படி?
செல்வமதனை நீ செலவிட்டது எப்படி?
மாற்றுச் சமுஉகத்தார் உன்னிலே கற்றது என்ன?
மன்னிப்பு குணம் அதிலே உன் நிலை என்ன?
வியாபாரியே உனது தராசு எப்படி?
விற்பனையாளனே உனது அளவு நிறுவை எப்படி?
அரசு அதிகாரியே உந்தன் அடக்கம் எப்படி?
நீதிபதியே உந்தன் நேர்மை எப்படி?
அரசாண்டவனே உந்தன் நீதம் எப்படி?
அழகிய பெண்ணே உந்தன் கற்பு எப்படி?
வாலிப வயதிலே உந்தன் ஒழுக்கம் எப்படி?
வயோதிக மனிதரை நீ நடத்தியது எப்படி?
கணவனே உன் மனைவி மேல் உனது அன்பு எப்படி?
மனைவியே உன் கணவன் மேல் உனது அடக்கம் எப்படி?
பிள்ளையைப் பெற்றோரே அவற்றை நீவீர் வளர்த்தது எப்படி?
பெற்றோரின் பிள்ளைகளே அவர்கள் மீது உங்களின் பணிவு எப்படி?
இறைவனின் பள்ளியுடன் உங்கள் தொடர்பு எப்படி?
இறைத்தூதரின் வழிகாட்டலிலே உன் நிலை எப்படி?
வட்டியை தடுத்தேனே நீ நடந்தது எப்படி?
வரதட்சணை கொடுமையில் உன் நிலை எப்படி?
மதுவிலே உன் நிலைப்பாடு எப்படி?
மானங்கெட்ட விபசாரத்திலே நீ எப்படி?
பிள்ளைப் பருவம் எப்படி?
வாலிபப் பருவம் எப்படி?
வயோதிகப் பருவம் எப்படி?
வாழ்விறுதியில் நீ மரணித்தது எப்படி?
கடன் பெற்றவரிடம் கனிவு காட்டினாயா?
கடன் வாங்கியதில் நேர்மை காட்டினாயா?
ஏழை மக்களுக்கு ‘ஸதகா’ செய்தாயா?
அண்டை அயலாருடன் இன்முகம் செய்தாயா?
பெற்ற பிள்ளைகளிடம் நீதம் காட்டினாயா?
பெரியோர் சிறியோரிடம் அன்பு காட்டினாயா?
அடுத்தவர் பொருள்களை அநியாயமாய் தின்றாயா?
அடுத்தவர் சொத்துக்களுக்கு அநீதி இழைத்தாயா?
அழகான முறையில் உனைப் படைத்திட்ட
ஆண்டவனுக்கு நன்றி செலுத்திட்டாயா?
ஊணம் இன்றி உனைப் படைத்திட்ட இறைவனை
ஒரு கனம் ஏனும் நன்றி குஉர்ந்திட்டாயா?
இந்த கேள்வி கணக்கு நாளிதனை விசுவாசித்தாயா?
ஒப்பில்லா திருக்குரானை வாசிக்க முனைந்தாயா?
ஒப்பற்ற ஓரிறைவனை ஒருநாளேனும் பயந்தாயா?
இந்த உலக வாழ்வு ஏன் என்று ஓர் நொடி சிந்தித்தாயா?
இறைவனுக்கு இணைவைத்து நரகம் செல்லும் குஉட்டத்தை
இறைவழியில் திருப்பிட ஒரு துரும்பையாவது அசைத்தாயா?
உண்மையிலும் பொய்மைதனிலும் உன் நிலை என்ன?
வாழ்ந்த காலத்தில் உந்தன் பொறாமை என்ன?
புறங்குஉறி கோல் முஉட்டி அவதூறு உரைத்து
பூமியில் குழப்பங்கள் செய்து திரிந்தாயா?
இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ
எல்லா கேள்விகளுக்கும் ‘மையத்தே’
நீதான் விடை குஉறப் போகின்றாய்
இது மக்களால் மக்களுக்கு கேட்கப்படப்போகும்
கேள்விகளோ நீதி விசாரணைகளோ அல்ல
படைத்த இறைவன் தன் படைப்பினங்களை
பார்த்து செய்யப்போகும் விசாரணை
மனிதர்களே நீங்கள் மரணத்தை எய்திடுங்கள்
மரணத்திற்கு முன்னால் தயார் செய்து கொள்ளுங்கள்
கடைசிவரை உங்களுடன் யாருமில்லை
கடைசியும் முதலுமான அல்லாஹ்வைத் தவிர
கடைசிவரை உங்களுடன் வரப்போவது
கண்ணியமாய் நீங்கள் செய்யும் கருமங்கள்தாம்.
நன்மை செய்வோம் நல்வழி வாழ்வோம்
நியாயத் தீர்ப்பு நாள்தனை
நயமுடன் எதிர்கொண்டு
இரு வாழ்விலும் இன்ப வெற்றி கொள்வோம்.
கவிஞர் முதுவை சல்மான்
ரியாத்