– ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
நேற்று, 27.10.09 அன்று எனது முன்னாள் தமிழ் பேராசிரியருமும்-தற்போதைய ‘புதிய வாணிகம்’; ஆசிரியரான ஜனாப். முகம்மது ஹ_சைன் அவர்கள் தன் மகன் அப்துல் ரகீம் திருமணத்திற்கு அழைப்புக் கொடுப்பதிற்காக வந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் கொடுத்த செய்தி அதிர்ச்சி தரும்படி இருந்தது. அது என்ன? தனது பத்திரிக்கைக்கு விளம்பரம் வாங்கச் செல்லும் போது 90 சதவீத முஸ்லிம்கள் வியாபாரியாகவே உள்ளனர். சுமார் பத்து சதவீதம் தான் உற்பத்தியாளர்களாகவும், தொழிழ் முனைவர்களாகவும் உள்ளனர் என்றார்.
அவர் சொன்ன தகவலை வைத்து எண்ண அலைகளை ஓட விட்டபின்பு-நம்மவர் சம்பாதிக்கச் சொல்லும் பழமொழி, “திரை கடலோடியும் திரவியம் தேடு” என்பது தான். ஆனால் அயல் மன்னில் சென்றவர்கள் படகு போன்ற கார்களில் பவனி வந்து-பங்களாக்களில் குடியிருப்பவர் சிலரே. நரம்பில் ஓடும் குருதியினை வேர்வையாக்கி வீடுகளில் கார் ஓட்டுதலும், கிளீனிங் வேலையிலும், கட்டிட வேலை, லிப்ட் ஆப்பரேட்டர், எலக்ட்ரிஷன், ஹோட்டல் சர்வர் போன்ற அடிமட்ட வேலை செய்யும் படிக்காத இளைஞர்கள் தான் அதிகம் என்றால் மிகையாகாது? நான் 1979 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றபோது எனக்குத் தெரிந்தவர் ஒரு ஹோட்டலில் மீன் கழுவிக் கொண்டிருந்தார். பின்பு மலேசியா சென்றபோது இன்னொரு தெரிந்தவர் தனது தலைக்கு ஒரு தலையணை கூட இல்லாது உட்காரும் மரக்கட்டையினை வைத்து படுத்திருந்தார். இனனொரு நிகழ்ச்சி என்னை உண்மையிலே ஒரு கணம் உலுக்கி விட்டது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரில் மலேசியா சபுர்ஆளி என்று பெருமையோடு வலம் வந்தவர்-அவர் சொந்த பந்தங்கள் எல்லாம் வசதியோடு வாழ்பவர்கள்;. அவருக்கு சுகர் வந்து ஒரு காலை முனங்காலுக்குக் கீழே எடுக்கப்பட்டதால் ஊருக்கு வருவதிற்கு கூச்சப்பட்டு வாழ்வதிற்காக ஒரு சாப்பிங் காம்ளக்ஸ் அருகில் கையேந்திக் கொண்டிருந்தார்.
அதே போன்று நான் 2001 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது பிரிமாண்ட்டில் நான் கல்லூரி ஆசிரியனாக இருந்த அதிராம்பட்;;டணத்தினைச்சார்ந்த ஒருவரைச் சந்தித்தேன். அவர் பி.எஸ்.ஸி படித்தவர், மனைவியும் வசதியானக் குடும்பத்தில் பிறந்தவர். அவரிடம் என்ன வேலை செய்கிறீர்கள் என்றேன். அதற்கு அவர் அங்குள்ள உடுப்பி ஹோட்டலில் சர்வராக இருப்பதாகவும் ஆயிரம் டாலர் கொடுப்பதாவும் கூறினார். முனைவி வுற்புறுத்தலால் இந்த வேலை பார்ப்பதாகச் சொன்னார். இவைகளை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் மனிதனுக்கு மானத்தோடு வாழும் நம்பிக்கைக் குறையும் போது இது போன்ற பரிதாபமான நிகழ்வுகள் நடக்கின்றன. இந்தியாவில் கூட எத்தனையோ நபர்கள் ஊனமுற்றாலும் படித்து டாக்டர்-என்ஜினியர்-முதுகலை பட்டம் பெற்றுமு;-இன்னும் கூடை-சேர் பின்னும் தொழில் முனைவர்களாகவும் இருக்கும் போது நாம் நம்பிக்கை இழக்கலாமா? ஆகவே நம்பிக்கை பழமொழிகளான தன் கையே தனக்குதவி-உன்னால் முடியும் தம்பி-வாழ்க்கை ஒரு எதிர் நீச்சல் அதில் நீந்தி வந்தவன் தான் வாழ்வான் போன்றவைகளை வருங்கால இளைஞர்களுக்குப் போதிக்க வேண்டும்.
படித்த இளைஞர்களுக்கு உலகில் வேலை வாய்ப்பு வருங்காலங்களில் மிகவும் பிரகாசமாக இருப்பது கடிணம். இப்போது கூட துபாய்-சிங்கப்பூர் போன்ற இடங்களில் வேலை பார்த்த நமது இளைஞர்கள் வேலையின்றி ஊருக்கு வந்து வேலை தேடும் படலத்தினைத் தொடங்கி உள்ளனர். அவர்களுக்க நான் சொல்லுவதெல்லாம் ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலைப்படாமல் வாழ்ந்து கொள்’ என்பது தான. எங்கள் ஊர் இளையாங்குடியில் தோலில் மணிபர்ஸ், பைகள், கேன்வாஸ் சூட் கேஸ்கள் செய்யும் தொழில் குடிசைத்தொழில் போல இருந்தது. ஆனால் அவைகளையெல்லாம் எப்படி வெளிநாடுகளுக்கு போட்டிகளுக்கிடையே ஏற்றுமதி செய்வது என்ற வழிவகை தெரியாததால் அவைகளெல்லாம் நலிந்து விட்டன. ஆனால் அதே தொழிலை இன்று சென்னையில் செய்து வெளிநாட்டு ஏற்றுமதியினைப் பெற்றவர்கள் லாபகரமாக நடத்தி வருகிறார்கள் என்றால் மறுக்க முடியாது. திண்டுக்கல்லில் தோல்வியாபாரம் கொடிகட்டி பறப்பதினை அனைவரும் அறிவர். ஆனால் அதே தேலை பதப்படுத்தி செருப்புகளாகவும், ஸ_க்களாகவும், கைப்பைகளாகவும், சூட் கேஸ்களாகவும், பெல்ட்களாக செய்யும் தொழிலை வெற்றிகரமாக நடத்தும் யுக்தி வாணியம்பாடி, ஆம்பூர், மேல்விசாரம், பேரணாம்பேட், ராணிப்பேட்டை போன்ற ஊரில் உள்ளவர்கள் அறிந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுப்பதோடுமட்டுமல்லாமல்-ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அன்னியச்செலவாணியை அள்ளிக் குவிக்கின்றனர். ஏன் அதே தொழிலை திண்டுக்கலில் இருக்கும் தோல் வியாபாரிகள் சிந்திக்கக் கூடாது.
ஊதாரணததிற்கு நாடார் ஜன மக்களை எடுத்துக் கொள்ளுங்கள. பழைய பேப்பர்கள்-இரும்புகள் வாங்க இரு சக்கர-மூன்று சக்கர வண்டிகளிலும் தெருத் தெருவாக அளைவதினைப் பார்க்கிறேம். ஆனால் அவர்கள் பழைய பொருட்களை வாங்குவதோடு நின்று விடுவதில்லை. அதனை தரம் பிரித்து பழைய பேப்பர்களை அட்டை செய்யும் இயந்திரத்தில் கொடுத்து அட்டைகளாக்கி விடுகின்றனர். பழைய இரும்புகளை உருக்கி-ஸ்டீல் பட்டறையில் கொடுத்து பாத்திரம் செய்யும் தொழிலும் ஈடுபட்டு தொழில் செய்கின்றனர். ஏன் அரேபியாவிற்கு நாம் பல்வேறு வேலைக்காகவும்-புனித கடமை நிறைவேற்றுவதற்காகவும் சென்று விதவிதமான பேரீத்தம் பலங்களை வாங்கி வந்து உற்றார்-உறவினருக்குக் கொடுத்து மகிழ்கிறோம். ஆனால் அதே பேரீத்தம் பழத்தினை இறக்குமதி செய்து தரம் பிரித்து பாக்கட்டிலும்-ஜூசாகவும் விற்பனை செய்யும் தொழிலையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
நான் அதிராம்பட்டிணக் கல்லூரியில் வேலையில் இருக்கும் போது எங்கு திரும்பினாலும் தென்னைத் தோப்புகளைக் காண்பேன். அதில் விளையும் தேங்காயை லாரிலாரியாக பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவர். ஆனால் தென்னை மரம் அதிகல்லாத தூத்துக்குடியில் தேங்காய் எண்ணெய் தயாரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் வி.வி.டி.தொழிற்சாலைகள் அதிகம். அதே தென்னை நாறுகளை கயிறுகளாகத் திரித்தும்-விரிப்புகளாவும்;-கால் மிதிகளாகவும் செய்யும் தொழில் ஈரோடில் அதிகம். அவைகளையே ஏன் அதிராம்பட்டிணத்தில் தென்னந்தோப்பு அதிபர்கள செய்து அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடாது? கடற்கரை ஊர்களில் மீன்-கருவாடு விற்கும் வியாபாரிகளாகத்தான் உள்ளனர். அந்த மீன்களை வெளிய+ர்களுக்கும்-கேரளா மாநிலம் போன்று அனுப்பாமல் அந்தந்த ஊர்களிலே ஏன் மீன் பதனிடும் ஆலை ஏற்படுத்தி அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கக்கூடாது. சீனாவில் ஒரு பழமொழி உண்டு. ‘பசித்தவனுக்கு வறுத்த மீனைக் கொடுக்காதே-மாறாக அவன் மீன் பிடித்து அதன் மூலம் வாழ்வு நடத்த ஒரு தூண்டில் முள் கொடுத்து மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடு’ என்று. ஆகவே பண்டிகை காலங்களில் தானம், தர்மம் செய்வதினை விட இது போன்ற தொழில்களில் அவர்களுக்கு வேலை கொடுத்து ஏழைகளுக்கு நிரந்தர வருமானத்தினைத் தரலாம்.
கோவை தொழில் அதிபர் ஜி.டி. நாயுடு ஒரு சாதாரண விவசாயி. அவர் எப்படி கார் மெக்கானிக் வேலை பார்த்து பலவேறு கார்-மோட்டார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழில் அதிபரானார் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒரு மருந்துக் கம்பெனி அதிபரானது பெரும்பாலானோருக்குத் தெரிந்திராது. ஒரு தடவை அவர் வயலில் உழுது கொண்டு இருந்தபோது லேபிலோடு கூடிய ஒரு மருந்து காலி பாட்டிலினைக் கண்டார். நாமாக இருந்தால் அதனை தூர எறிந்து விடுவோம். ஆனால் அவர் அதை எடுத்து அந்த மருந்துக் கம்பெனி விலாசத்திற்கு கடிதம் எழுதி அதனை தயாரிக்கும் உரிமமும் பெற்றார். ஏன் ஜப்பானியர் பொம்மை வியாபாரத்திற்கு பெயர் பெற்றவர்கள் என்றால்-தூக்கி வீசப்பட்ட காலி டப்பாவைக் கூட விடாமல் அதில் தங்கள் கை வண்ணங்களால் அவைகளை அனைவரும் ரசிக்கும் பொம்மைகளாக ஆக்கி விற்று விடுகின்றனர்.
எங்கள் ஊரைச்சுற்றி ஏராளமான அரிசி ஆலைகள் அதிகம். ஆனால் நெல்லிலிருந்து பிரிக்கப்படும் தவிடு-உமியினைக் கொண்டு ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை போன்ற மாவட்டங்களில் மாட்டுத் தீவணம், கோழித் தீவணம், ஆயில், சோப், வனஸ்பதி தயாரிக்கிறார்கள் என்பதினை சில காலங்களுக்கு முன்னர் தானே அறிவர். இருந்தாலும் இன்னும் தாங்களே அந்தத் தொழிலைத் தொடங்காது அவர்களுக்கு தவிடு, உமிகளை விற்கும் வியாபாரியாகவே உள்ளனர் என்றால் ஆச்சரியமாக இல்லையா?
முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் எழைகள். வுpதவைத் தாய்மார்கள் இட்லி, இடியாப்பம் சுட்டு விற்பதினையும், தோசை, இட்லி மாவாட்டி அதனை விற்வதினையும் அறிவோம். அதேபோன்று நமது தாய்மார்கள் மீன் மசாலா, கரி மசாலா, அப்பளம், ஊறுகாய் தயாரிப்பதில் சிறந்தவர்கள். ஆனால் அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து சக்தி மசாலா போன்ற நிறுவனம் ரெடிமிக்ஸ் உணவு பண்டங்களைத் தொடங்கி ஏன் நமது பெண்களுக்கு வேலையினைக் கொடுக்கக் கூடாது. சுய தொழில் தொடங்கக்கூட அரசு மானியம் அளிக்கப் படுகிறதே.
நம்மில் சிலர் பம்பாய், குஜராத், டெல்லி போன்ற நகரங்களில் ரெடிமேட் துணிகளை வாங்கி ஏற்றுமதியில் ஈடுபடுகின்றனர். ஏன் அவர்களே துணிகளாக வாங்கி தையல் இயந்திரங்களால் பெண்கள் உதவியால் தைத்து வெளிநாட்டுக்கு அனுப்பக் கூடாது. அதுபோன்று உற்பத்தியில் ஈடுபட்ட திருப்ப+ர் இன்று செல்வும் கொழிக்கும் நகரமாகத் திகழ்கிறதே. மும்பையில் ஆயல் தொழிலில் ஈடுபட்ட தன் தந்தையினை விட பல படிக்கு மேல் சென்று மின்பொருள் தயாரிக்கும் விப்ரோ நிறுவனத்தினை ஆஸிம் பிரேம்ஜி நிறுவி 2008-2009 ஆம் ஆண்டு 19 சதவீத லாபத்தினை ஈட்டி ரூபாய்1162 கோடி சம்பாதித்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.. என் கல்லூரி நண்பர் அமீர் அப்துல் காதர் கடந்த வாரம் தன் சொந்த ஊரான கீழக்கரை சென்று வந்தார் அவரை நலம் விசாரிக்கும் போது, அவர் சொன்னார.; தனதூரில் அறிவித்த மின்வெட்டு இரண்டு மணிநேரம்-அறிவிக்காத மின்வெட்டு பல தடவை என்றார். கடற்கரை நகரங்கள் காற்றும் வெயிலும் அதிகமாக இருக்கும். ஆகவே மின் பற்றாக் குறையினைப் போக்க ஏன் சோலார் கருவிகளை உற்பத்தி செய்து மின் விசிறி. வுpளக்கு, ஏன் மோட்டாரில் தண்ணீர் இறைக்கக் கூட வழிவகுக்கக் கூடாது. அரசே மானியம் வழங்குகிறதே. கடலூர் மாவட்டத்தில் காரியமங்கலம் என்ற ஊர் பஞ்சாயத்தின் மின் தேவைகளை சோலார் எனர்ஜி ழூலம் கிடைக்கப் பெற்ற இந்தியாவில் முதல் கிராம பஞ்சாயத்தாகத் திகழ்ந்து ஜனாதிபதியின் பரிசையும் தட்டிச்சென்றதே. பணம் படைத்தவர்கள் தான் மட்டும் இன்வெர்ட்டர், ஜென்ஜெட் போட்டுக் கொண்டு வாழ்வதினை விட்டு ஏழைகளுக்கும் உதவுமாறு செய்யலாமே1
நமதூரில் மாட்டு வண்டிகளிலும், தள்ளு வண்டுகளிலும் சுத்திகரிக்காத தண்ணீர் சப்ளை செய்வதைப் பார்க்கலாம். அதனால் பயோரியா போன்ற தண்ணீர் சம்பந்தமான நோய்கள் பரவ வழிகள் ஏற்படும். ஆகவே வாட்டர் சுத்திகரித்து பொதுமக்களுக்கு சப்ளை செய்யும் ஆலைகளை நிறுவலாம். நம்மில் சிமிண்ட் தொழில் அதிபர்கள் மானாமதுரை யாசின் சிமிண்ட்ஸ் போன்ற ஒரு சிலர் இருக்கலாம். ஆனால் அந்தத் தொழிலைத் தொடங்கிய ராம்கோ, இந்தியன் சிமிண்ட்ஸ், சங்கர் சிமிண்ட்ஸ் போன்றவர்களெல்லாம் சாப்ட்வேர் தொழில் இறங்கியள்ளனர். ஏன் அரசியல் வாதியாக இருந்து கல்வியாளராக மாறிய ஜேப்பியார் ரெடி கிராவல் மிக்ஸ் தொழில் செய்கிறார். நான் அதிராம்பட்டிணம் கல்லூரியில் வேலை பார்த்தபோது இருந்த தமிழ் பேராசிரியர் நாகர்கோவிலைச்சார்ந்தவர் அசன் அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு என்னைச் சந்திக்க வந்தார். அவரிடம் இப்போது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் கன்யாகுமரி பகுதியில் மீன் பிடிப்பதிற்கான வலைகள் சென்னையிலிருந்து தான வாங்கினார்கள். ஏன் நாமும் அதேபோன்ற மீன் பிடி வலையினை தயாரிக்கக் கூடாது என்று யோசித்து மீன் வலை தயாரிககும் தொழில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தொடங்கியுள்ளேன்-அதில் அந்தப் பகுதியினைச் சார்ந்த 20 நபர்களுக்கு வேலை கொடுத்துள்ளேன்-அங்கிருந்து சென்னைக்கு விற்பனையும் செய்கிறேன் என்றார். அதேபோன்று சென்னை மின்ட் அரசு பிரஸ் எதிர்புறம் நர்சரி செடிகள் உள்ளதாக அறிந்து அங்கு செனறேன். அதனை நடத்தி வருபவர் முபீன் ராஜா என்ற 30வயது இளைஞர். அவரிடம் எப்படி இந்த தொழிலுக்கு வந்தீர்கள் என்றேன். தான் தேனியைச் சார்ந்தவன் என்றும், நர்சரிச் செடிகள் வாங்கி விற்று வருந்ததாகவும், அதன் பின்பு அவை பெங்களுரிலிருந்து வரகிறது என்று அங்கே சென்றதாகவும். அங்கே சென்றால் நரசரி செடிகளெல்லாம் தமிழ்நாட்டில் ஒசூரிலிருந்து வருகிறது என்றும் அறிந்தேன். ஆககே ஒசூருக்கு சென்றதாகவும் அங்கே தளி என்ற இடத்தில் நர்சரி செடிகள் பயிடப்பட்டதினை அறிந்து அங்கேயே இரண்டு ஏக்கரை லீஸ் எடுத்து தானே நர்சரிச் செடிகள் பயிருட்டு இன்று மதுரை, தேனி, பெங்களுர், சென்னை போன்ற இடங்களில் நர்சரி கார்டன்கள் நடத்துவதாகச்சொன்னார்.(தளியினை லிட்டில் இங்கிலாந்து என்று ஆங்கிலேயர் அழைத்தார்கள் என்று நான் அங்கு எஸ்.பியாக இருந்தபோது அறிவேன்). இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் எந்தத்தொழிலும் கேவலமில்லை-அது சொந்தத்தொழிலாக அமைய வேண்டும். கருவாடு விற்ற காசு நாறாது என்பதினை அனைவரும் அறிவர். அதேபோன்று மாந்தோப்புகளை வைத்திருப்பவர்கள் மாம்பழங்களை விற்கும் வெறும் வியாபாரிகளாக அல்லாது-மாம்பழ ஜூஸ்-மாங்காய் ஊறுகாய் போன்றவைகள் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தயாரிப்பது போல தயாரிப்பில் ஈடுபடலாம். ஏன் வெறும் கார்ட்வேர் வியாபாரத்தினை காலங்காலமாக செய்யாது அந்தக் கார்டுவேர்-பெயின்ட் போன்றவைகளைத் தயாரிக்கும் தொழிலும் ஈடுபடவேண்டும்.
ஏன் வறண்ட மாவட்டங்களில் காட்டுக் கருவை முள்மரத்தினை வெட்டி கரிமூட்டம் போட்டு அதனை விற்பனைக்கு வெளிய+ர்களுக்கு அனுப்புவது அந்த மாவட்டத்தினைச் சார்ந்தவர்கள் அறிவர். ஆனால் அந்தக் கரியினை பயன்படுத்தி மின்சாரம்;, கிராபைட,; பென்சில் எழுதும் பொருளுக்கும,; மில்களுக்கு எரி பொருளாகவும் உபயோகிக்கிறார்கள் என்பதினை அறிந்தவர் சிலரே. மதுரையினைச்சார்ந்த ஓருவர் தெர்மல் எனர்ஜி சொலுசன் டிரங்க் பெட்டி போன்ற கரி அடுப்பினை கண்டு பிடித்துள்ளார். அதில் புகையே வராது என்ற தகவலும் உள்ளது. ஏன் அந்தப் பகுதியினைச்சார்ந்த நம்மவர் அதேபோன்ற தொழில்களில் ஈடுபடக்கூடாது? சிறிய தொழில் தொடங்குவதிற் டிக்(தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்) சிட்பி(சிறு தொழில் முன்னேற்ற வங்கி) போன்ற நிறுவனங்கள் பொருள் உதவி செய்கின்றனர். சில தொழில்களில் சப்சைடி என்ற அரசு சலுகைகளும்-ஏற்றுமதி பொருள்களுக்கு டிராபேக் என்ற சலுகைகளும் உள்ளன. உலகிலேயே சீனா நாடு 12 சதவீத ஏற்றுமதியினை எட்டி முதல் இடத்திலும் அதற்கு அடுத்த படியாக இந்தியா 10.8 சதவீத ஏற்றுமதியினையும் தொட்டு விட்டது.
இறைவன் நமக்கு இரண்டு கைகளை மட்டும் கொடுக்கவில்லை-மாறாக அந்தக் கைகளில் பத்து விரல்களையும் கொடுத்தது போல-மனிதன் முன்னேற்றம் அடைவதிற்கு பல வழிகள் உள்ளன. அவைகளில் பலருக்கு உதவக்கூடிய தொழில்களை அந்தந்த பகுதிற்கேற்ப ஆரம்பித்தால் நிச்சயமாக நாளை நமதாகாதா?