தலைக்கவசம் கட்டாயம்…..பெற்றோர்கள் கவனத்திற்கு..

தலைக்கவசம் கட்டாயம்..
பெற்றோர்கள் கவனத்திற்கு..

இராமநாதபுரம் :
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வின்போது, பள்ளிகளில் விடுவதற்காக தங்களது குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்களில் சில பெற்றோர்கள் மட்டுமே தலைக்கவசம் அணிந்து வருவது தெரியவந்துள்ளது.
மேற்படி பள்ளி குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்துவரும் பெற்றோர்கள் தலைக்கவசம் அணியாமல் வருவதால், எதிர்காலத்தில் குழந்தைகளும் 18 வயதை கடந்தவுடன், இது போன்று தலைக்கவசம் அணியாமலும், மோட்டார் வாகன விதிகளை கடைபிடிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும் இருசக்கர வாகனங்களில் வரும் பெற்றோர்கள் குழந்தைகளின் புத்தகப்பை மற்றும் உணவுப்பைகளை வாகனத்தின் முன் வைத்து ஓட்டிவருவதாலும், இரண்டு மற்றும் மூன்று குழந்தைகளை வைத்து ஓட்டிவருவதாலும் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஏற்கனவே மாவட்ட காவல்துறையின் சார்பில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை அழைத்துவரும் பெற்றோர் தலைக்கவசம் அணிந்து வர வேண்டியது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளின் அருகிலும் வாகன தணிக்கை மேற்கொண்டு இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வரும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.