General News

ஷார்ஜாவில் கவிஞர் இதயா எழுதிய ‘அகர மலர்கள்’ கவிதை நூல் வெளியீடு

ஷார்ஜாவில் கவிஞர் இதயா எழுதிய ‘அகர மலர்கள்’ கவிதை நூல் வெளியீடு

ஷார்ஜா :

ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தை சேர்ந்த புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இதில் அமைந்துள்ள யுனிவர்ஷல் பப்ளிஷர்ஸ் அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் பரமக்குடி கவிஞர் இதயா எழுதிய ‘அகர மலர்கள்’ கவிதை நூலை கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஆ. முகமது முகைதீன் வெளியிட அதன் முதல் பிரதியை இஸ்லாமிய இலக்கியக் கழக பொருளாளர் ஷாஜஹான் பெற்றுக் கொண்டார்.

அப்போது பேசிய முனைவர் ஆ. முகமது முகைதீன் தனது உரையில் கவிஞர் இதயா ஆங்கில ஆசிரியராக இருந்தாலும், அவரது கவிதை நடையும், சொல்லாட்சியும், எழுத்தும் இணையற்றது. அவரது கவிதைகள் உணர்ச்சிகள், உறவுகள், பல்வேறு சூழ்நிலைகளின் நேர்த்தியான கலவையாகும். அகர மலர்கள் மனித இதயத்தின் ஆழத்தை தொடுகின்றன என்றார்.

அருகில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், நூல் குடில் பதிப்பகத்தின் மெய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button