General News
விதவை
N. ஹஜ் முகம்மது ஸலாஹி.
வாடிட தயாராக இருக்கும்
மலர்களுக்கு தண்ணீர் ஊற்றி
மறுவாழ்வு கொடுக்கிறது
இந்த சமூகம்.
உயிரிழக்க தயாராக இருக்கும்
தாவரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி
மறுவாழ்வு கொடுக்கிறது
இந்த சமூகம்.
பசியால் துடித்து மயங்கும்
ஜீவன்களுக்கு உணவூட்டி
மறுவாழ்வு கொடுக்கிறது
இந்த சமூகம்.
இயங்க தயங்கிக் கொண்டிருக்கும்
வாகனங்களை சரி செய்து
மறுவாழ்வு கொடுக்கிறது
இந்த சமூகம்.
மூலையிலே முடங்கி கிடக்கும்
இயந்திரங்களை செப்பனிட்டு
மறுவாழ்வு கொடுக்கிறது
இந்த சமூகம்
-ஆனால்,
மணவாழ்வு இடிந்துப்போன
ஒரு மங்கைக்குமட்டும்
மறுவாழ்வு கொடுக்க
இந்த சமூகம்தயங்குகிறதே
எதனால்…?
நன்றி : நர்கிஸ் ஜனவரி 2012