கவிதைகள் (All)

ஈத் பெருநாள் வாழ்த்துகள்​ !

வெயிலின் கொடுமை தணித்த புனித நோன்புகள்
வேகமாய்க் கடந்துபோன உன்னத நாட்கள்
வேகவேகமாய் வந்தெதிரே நிற்கும் அற்புத ஈத் பெருநாள்
ஆண்டுதோறும் காத்திருக்கும் அல்லாஹ்வின் அருள் திருநாள்
 
மதங்கள் கடந்த மாண்பு கொண்டு
நல்லிணக்கம் நட்புணர்வு ஈகை வளர்த்து
உடலுக்கு ஒருமுறை புத்துணர்ச்சி அளித்து
உள்ளமெலாம் பூரிப்பை விதைக்கும் நன்னாள்!
 
பசியின் தாக்கம் அறிய வைத்து
தாகத்தின் ஏக்கம் உணர வைத்து
புலன்களின் ஆக்கம் கட்டுக்குள் வைத்து
புலப்படா புண்ணியங்களை அள்ளிவரும் பொன்னாள்!
 
கடமைகள் புரிவோம்! கண்ணியம் காப்போம்!
இன்னா மறப்போம்! இனிமை பேணுவோம்!
மதங்கள் கடப்போம்! மனிதம் வளர்ப்போம்!
மானுட வாழ்வின் மகத்துவம் அறிவோம்!
 
பொல்லா எண்ணங்கள் புறமே தள்ளி
நல்லார் இதயங்களில் குடிபுக முயல்வோம்!
அல்லாஹ் ஒருவனே அனைத்துக்கும் உரியவன்!
அவன்தாழ் பணிந்து அடைக்கலம் புகுவோம்!
 
எல்லா வளமும் தரும் ஈதுப்பெருநாளில் – குறை
இல்லா மனத்தோடு கூடி மகிழ்வோம்!
சொல்லால் செயலால் குறையேதும் புரியாமல்
கொண்டாடி மகிழ்வோம் இன்பத்திருநாளை!
ஈதுல் ஃபித்ருப் பெருநாளை!
 
மனமார்ந்த வாழ்த்துகள்!
 
அன்புடன்
ஜியா/நர்கிஸ்/அல்தாஃப்/ஆனிஷா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button