General News
தேசிய லங்காடி போட்டி: முதுகுளத்தூர் மாணவர் தேர்வு
முதுகுளத்தூர் : தேசிய லங்காடி போட்டிக்கு தமிழக அணிக்காக முதுகுளத்தூர் மாணவர் தேவசித்தம் தேர்வு செய்யபட்டுள்ளார். தேசிய அளவில் சீனியர் லங்காடி போட்டிகள் நவ.,4ம் தேதி புனேயில் நடக்க உள்ளது.
இதில் கலந்து கொள்ளும் தமிழக அணி வீரர்களுக்கான தேர்வு மதுரையில் நடந்தது.
முதுகுளத்தூர் மாணவர் தேவசித்தம் தேர்வு செய்யபட்டுள்ளார். இவரையும், பயிற்சியாளர் ஜான்சன் கலைச்செல்வனையும், ராமநாதபுரம் மாவட்ட லங்காடி கழக தலைவர் குமரன் சேதுபதி, துணை தலைவர் ரமேஷ்பாபு, பொருளாளர் ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.