கவிதைகள் (All)

கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப் போட்டி 2013

அன்புடையீர்
ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் உலகளாவிய “கல்யாண் நினைவு – மாபெரும் கவிதைப்
போட்டி”க்கான கவிதைகள் பெறும் நேர அவகாசம் நாளை (15-02-2013) நள்ளிரவுடன்
முடிவடைகிறது, இந்திய மதிப்பில் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம், சான்றிதழ் மற்றும் புரவலர்கள்
வழங்கும் சிறப்பு பரிசுகள் இவையாவும் வெற்றி பெறும் கவிதைகளுக்கு பரிசாக
காத்துக் கொண்டிருக்கின்றன.
இதுவரை கவிதை அனுப்பாதோர் எவரேனும் இருந்தால் உடனே தங்கள் கவிதைகளை
rtskavithaipotti2013@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்
கொள்கிறோம். இப்போட்டிக்கான விதிமுறைகள் யாவும் 01-01-2013 திகதியிட்ட ரியாத் தமிழ்ச்சங்க
மின்மடலாற்குழுவிலும்,தஃபர்ரஜ் மின் மடலாற்குழுவிலும்,சவூதி தமிழ்ச்சங்க மின்மடலாற்குழுவிலும்
ரியாத் தமிழ்ச்சங்க வலைத்தளம்,பண்புடன் மின்மடலாற்குழுமம், இந்நேரம்.காம், திண்ணை.காம், தமிழக மின் நாளிதழ்கள் தினமணி,தினமலர் மற்றும் ரியாத் தமிழ்ச்சங்க முக நூல் பக்கத்திலும் வெளியாகி இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேன் மதுரத் தமிழோசை தேசமெங்கும் ஒலிக்கச்செய்வோம்.. கவிஞர்களே பங்கு பெறுவீர்…
*
தலைவர் – ஒருங்கிணைப்பாளர்
கலை இலக்கியக் குழு
ரியாத் தமிழ்ச்சங்கம்.
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே…
நீ நதி போல ஓடிக்கொண்டிரு…
*
ஷாஜஹான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button