General News
முதுகுளத்தூரில் உலக எழுத்தறிவு தின விழா

முதுகுளத்தூர் :
முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளிக்கூடத்தில் இல்லம் தேடிக் கல்வி மையங்களின் சார்பில் உலக எழுத்தறிவு தின விழா நடந்தது.
இந்த விழாவில் தலைமை ஆசிரியர் காதர் ஷா மற்றும் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அப்போது மாணவ, மாணவியர் உலக எழுத்தறிவு தினம் என்ற எழுத்தை தங்களது சிலேட்டுகளில் எழுதி வரிசையாக நின்றனர்.
