கவிதைகள் (All)

என்னவள் பிறந்தபோது

– சிக்கந்தர்

கருமேகங்கள் குடைபிடிக்க
கனகத்துக்குயில்கள் கூஉடிக்குயில
தென்னங்கீற்றின் ஊடே வீசிய
தென்றல் ஒன்று திண்ணையில் வந்தமர
தேவர்கள் வந்து தோரணம் கட்ட
மங்கள வாத்தியங்கள் இசை முழங்க
வானவர்கள் வாழ்ச்தி வழி நடத்த
கதிரவன் வந்து சாமரம் வீச
ஈரம் சொட்டும் மொட்டுகளெல்லாம்
ஊர்வலமாய் வந்து நிற்க
ஊர்வன முதல் உறங்குவன வரை
ஒரு நொடி வியந்துவியக்கிய அந்த
அதிகாலையில் உதித்தவள் என்னவள்

மேனிபட்டதும் மெய்சிலிர்த்து
பூமித்தாய் புளகாங்கிதமடைய
துருவங்கள் இரண்டும் தூரம் போக
அந்த விடியலில் அந்தி மந்தாரை மலர
சங்கையுடன் நிலா சங்கமிக்க
தென்றலாய் மாறி மணம் வீச
அதிசயங்கள் எழும்
அடங்கி தலைகுனிய
இயற்கையும் அகம் குளிர்ந்து
முகம் மலர
இவள் மலர்ந்த இன்னாளில்
மலர்ந்த மலர்களினூடே
உதித்தவள் என்னவள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button