General News
துபாயில் ரமளானை வரவேற்கும் முப்பெரும் விழா

ஈடிஏ டி.என்.எஸ். சீனியர் எக்ஸிகியூடிவ் டைரக்டர் ஏ. நூருல் ஹக் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் பயணத்தில் பல்வேறு படித்தரங்களை நினைவு கூர்ந்தார்.
சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வர் எம். முஹம்மது நூர் சிராஜி ஹஜ்ரத் மற்றும் பேராசிரியர் முஹம்மது அனஸ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
பயணம் என்னும் தலைப்பில் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார்.
சாதிக் காக்கா, அஷ்ரஃப் அலி, காயல் மௌலானா ஆகியோர் இறை கீதங்கள் பாடினர். லெப்பைக்குடிக்காடு மௌலவி தாவூத் அலி மன்பயீ நிகழ்வினை தொகுத்து வழங்கினார். நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.