கட்டுரைகள்

வெறும் வயிற்றில் தண்ணீர் குடியுங்கள் ( செங்கம் எஸ். அன்வர்பாஷா )

அருமை நாயகம் (ஸல்) அவர்கள், “அறிவுப்பூர்வமான புத்திக் கூர்மையுள்ள செயல்கள், முஃமின்கள் இழந்துவிட்ட பொக்கிஷங்களாகும். அது எங்கிருந்து கிடைத்தாலும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்கள். சமீபத்தில் ஜப்பான் நாட்டின், “நோய் ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் சார்பாக (Japanese Sickness Associa tion)                       அறிக்கை வெளியிடப்பட்டது. மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையிலுள்ள அந்த அறிக்கையை வாசகர்களுக்கு பயன் அளிக்கும் என்று தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், அன்றாடம் தொல்லை கொடுத்து வரும் வியாதிகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. உதாரணமாக, தலைவலி, இரத்த அழுத்தம், அனீமியா (இரத்தக் குறைவு) உடலின் இணைப்புகளில் ஏற்படும் வலி, உடலில் சதை வளர்வது, இதயம் வேகமாக துடித்தல், மயக்கம், சளியுடன் கூடிய இருமல், காசநோய், ஈரல் நோய்கள், சிறுநீர் நோய்கள், வாயு தொல்லைகள், சர்க்கரை நோய், கண்ணில் வரும் நோய்கள், பெண்களின் மாதவிடாய் தொல்லைகள் இவை அனைத்திற்கும் நிவாரணம் அளிக்கிறது. இது தவிர மூக்கு, காது, தொண்டை (ENT) போன்ற உறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். (வல்லாஹு அஃலம்) காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும் நான்கு பெரிய டம்ளர் நிரம்ப, ஒரே நேரத்தில் குடித்துவிட வேண்டும். இதன் பிறகு 45 நிமிடங்கள் வரை எதுவும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது.

ஒரே நேரத்தில், ஒருவரால் நான்கு டம்ளர் தண்ணீர் குடிக்க முடியவில்லையென்றால் ஆரம்பத்தில் ஒரு டம்ளரிலிருந்து துவங்கி படிப்படியாக முயன்று நான்கு டம்ளர் தண்ணீர் குடிக்க பழகிக் கொள்ள வேண்டும். நான்கு டம்ளர்களுக்கு மேல் குடிக்கக் கூடாது. இந்த செயலை வியாதியஸ்தரும், வியாதி இல்லாத ஆரோக்கியமானவரும் சோதித்துப் பார்க்கலாம். இதனால், வியாதியஸ்தர் குணமடைவார். சுகமுள்ளவர். வியாதிவராமல் பாதுகாப்புடன் இருப்பர்.

இந்த அறிக்கையை வெளியிட்ட ஜப்பானின் நோய், ஆராய்ச்சிக் கழகத்தினர், கீழ்கண்ட வாக்குறுதிகளையும் உறுதியுடன் அறிவித்துள்ளனர்.

“நாங்கள் கூறியுள்ள படி தண்ணீரை குடித்து வந்தால், இரத்த அழுத்தமுள்ளவர் ஒரு மாதத்திலும், வாயு            (  gas  ) தொல்லையுள்ளவர் பத்து தினங்களிலும், சர்க்கரை நோயாளி ஒரு மாதத்திலும், மலச்சிக்கல் உள்ளவர் பத்து தினங்களிலும், கேன்ஸர் நோய் உள்ளவர் நான்கு மாதங்களிலும் டி.பி ( T.B.  ) நோயாளி மூன்று மாதங்களிலும் பூர்ண குணம் அடைவார்கள்.

இந்த சிகிச்சை முறையை துவங்கும் போது ஆரம்பத்தில் சில தினங்கள், சிறுநீர் அதிகமாக வெளியேறும். பிறகு படிப்படியாக வழக்கம் போல் மாமூல் நிலைக்கு குறைந்துவிடும்.

தன் அடியான் நோய்வாய்ப்படும் போது எல்லாம் வல்ல இறைவன் தான் சுகம் அளிப்பவன். அதே நம்பிக்கையில் அல்லாஹ்வின் மீது பாரத்தை போட்டுவிட்டு நாம் சிகிச்சை முறையை துவக்கினால் இன்ஷா அல்லாஹ் குணம் அடையலாம்.

( குர்ஆனின் குரல் – ஜுன் 2012 இதழிலிருந்து )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button