General News
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அமெரிக்க தமிழ் பேராசிரியர் கௌரவிப்பு
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அமெரிக்க தமிழ் பேராசிரியர் கௌரவிப்பு
திருச்சி :
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பொருளாதாரத்துறையின் சார்பில் இரண்டு நாட்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
இந்த கருத்தரங்கில் சிறப்பு சொற்பொழிவாளராக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மார்ஷல் ஸ்கூல் ஆப் பிசினசின் டாடா சயன்ஸ் பேராசிரியர் டாக்டர் ஆரிப் அன்சாரி பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
அவருக்கு கல்லூரி தாளாளர் டாக்டர் காஜா நசீமுதீன், பொருளாளர் எம்.ஜே. ஜமால் முஹம்மது, உதவிச் செயலர் முனைவர் அப்துல் சமத் உள்ளிட்டோர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர். அருகில் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளனர்.