உலக மண் தினம்.
மண் வாசத்தில் மகிழ்வோம்.
மண்ணின் மைந்தர் என்போம்.
மண்ணாசை கூடாதென்போம்.
மண் காக்க போராடுவோம்.
மண்ணாகப் போக சபிப்போம்.
மண் சோறு சாப்பிடுவோம்.
பெரியார் மண் என்போம்.
ஆன்மீக மண் என்போம்.
மண்ணில் வீடு கட்டுவோம்.
மண்பாண்டங்களும் செய்வோம்.
மண்ணில் தோன்றியவர்
மண்ணில் மறைவரென்போம்.
தாய் மண்ணை நேசிப்போம்.
மண்ணில் பொழியும் மழை
மரவளம் காத்திடுமே.
மரவளம் காப்பதனால்
மழை வளம் பெருகிடுமே.
மண்ணின் கீழ் நீர்வளத்தால்
விவசாயம் தழைத்திடுமே.
மக்கள் தாகம் தணித்திடுமே.
மற்ற உயிரினங்கள்,தாவரங்கள் வளர
மண்வளம் அவசியமே.
மண்ணில் தோன்றியவர்
மண்ணில் மறையும் வரை
மண்வளம் காக்க , இயன்றவரை
மகத்தான சேவை செய்வதே
மண்ணுறை மாந்தர்க்கு
மன்னிய சேவையன்றோ.
மாசுபடாது மண்ணைக் காப்பது நம் கடமையன்றோ.
மண்வளம் காக்க மன உறுதி கொள்வோம்.
அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
5.12.2024.