General News
துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியினை 25.04.2012 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது.
நிகழ்வில் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் ‘பயணம்’ எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவினை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வு www.justin.tv/dblockdubai எனும் இணையத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்வு இணையத்தளத்தில் தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பாகும் என நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.