General News
துபாயில் கோடையைக் குளிர்வித்த சிரிப்பலை
துபாய் : உலக நகைச்சுவையாளர் சங்க துபாய் கிளை ஜுலை மாத நகைச்சுவை கூட்டம் 13.07.2012 வெள்ளிக்கிழமை மாலை அல் கிஸஸ் ஆப்பிள் சர்வதேசப் பள்ளியில் நடைபெற்றது.
உலக நகைச்சுவையாளர் சங்க துபாய் கிளை தலைவர் முஹைதீன் பிச்சை தலைமை வகித்தார். விடுமுறையில் தாயகம் சென்றிருந்த போது நடந்த நகைச்சுவை நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நகைச்சுவை இருப்பதனை இந்நிகழ்வுகள் உணர்த்துவதாகக் குறிப்பிட்டார்.
உதவித் தலைவர் இத்ரீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பாவை நியாஸ், முத்துக்கோதை, தண்ணீர்மலை, சிவகுமார், சேஷாத்ரி, அஹமது இப்ராஹிம், இளையராஜா உள்ளிட்ட பலர் தங்களது நகைச்சுவைக் குறிப்புகளை பகிர்ந்துகொண்டு கோடையின் வெப்பத்தைக் சிரிப்பலையின் மூலம் குளிர்வித்தனர்.
நிறுவன புரவலர் குணா நிகழ்வினை தொகுத்து வழங்கினார். பொதுமேடையில் தங்களது கூச்ச உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு தங்களது தனித்திறனை வளர்த்துக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் உலக நகைச்சுவையாளர் சங்க துபாய் கிளை தளம் அமைத்துக் கொடுக்க எப்பொழுதும் அதன் நிர்வாகிகள் அனைவரும் தயாராய் இருப்பதனை தெரிவித்தார். இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை உலக நகைச்சுவையாளர் சங்க நிர்வாகிகள் கான் முஹம்மது, யூசுப், கமலக்கண்ணன்,சுல்தான் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.