General News
முதுகுளத்தூர் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி, திங்கள்கிழமை துவங்கியது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவில், முதுகுளத்தூரில் அரசு மற்றும் கலைக் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. தற்போது தாற்காலிகமாக முதுகுளத்தூர் அரசு மேனிலைப் பள்ளி வளாக்த்தில், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் சிலவற்றில் ஜூலை 27-ஆம் தேதி முதல் வகுப்புகள் துவங்க உள்ளன.
புதிய கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சியை மு. முருகன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பரம மனோகரன், கல்லூரி கண்காணிப்பாளர் குமரேசன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், என்.சி.சி. அலுவலர் எஸ். துரைப்பாண்டின் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.