General News

மஸ்கட்டில் இஸ்லாமிய இலக்கிய கழக, ‘தமிழ்க் குடும்ப இஃப்தார்’

மஸ்கட்: ஓமானில், மஸ்கட் இஸ்லாமிய இலக்கிய கழகம், சார்பில் ‘தமிழ்க் குடும்ப இஃப்தார்’ நிகழ்ச்சி ஆகஸ்ட் 2-ஆம் தேதி, வியாழக்கிழமை மாலை ‘மெஸ்பான் ரெஸ்ட்டாரன்ட்’ ஹாலில் சிறப்பாக நடை பெற்றது.

 இதில் மஸ்கட் தமிழ் முஸ்லீம் பிரமுகர்கள், இலக்கிய கழக உறுப்பினர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து சிறப்பித்தனர் என அதன் தலைவர் திரு. பஷீர் முகமது அவர்கள்  தெரிவித்தார்.

 நிகழ்ச்சியில் ஜனாப். மீரான் அவர்கள் ரமலான் பற்றிய உரையும், பிரார்த்தனையும்  நிகழ்த்தினார்கள். இஸ்லாமிய இலக்கிய கழக வளைகுடா பொறுப்பாளர் மற்றும் மஸ்கட் கழக தலைவர் திரு. பஷீர் முகமது, துவக்க உரை ஆற்றினார்.

 விழா ஏற்படுகளை கழக நிர்வாகிகள் திரு. காமில் தாகிர்கனி, திரு.அப்துல் சலாம், திரு.அபுல்ஹசன், திரு. அன்வர் அலி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தினர். கழக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினரின் இனிய உபசரிப்போடு, சிறப்பு உணவு விருந்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button