General News
இரண்டும் ஒன்றல்ல
இரண்டும் ஒன்றல்ல
உடல் கொதித்தால்
உண்டாவது வியர்வை
இதயம் கொதித்தால்
உண்டாவது கண்ணீர்
சுவையும் ஒன்றுதான்
நிறமும் ஒன்றுதான்
என்ற போதிலும்
இரண்டும் ஒன்றல்ல
ஏன் தெரியுமா?
வியர்வை…இ
அது ஆக்கும் தன்மையுடையது
அழும் கண்ணீர் …இ
அது அழிக்கும் தன்மையுடையது
வியர்வையை வரவேற்போம்
வெறும் கண்ணீரை
விரட்டியடிப்போம்.
முதுவை சல்மான்
ரியாத்