கவிதைகள் (All)
சுயகுறிப்பேடு (DIARY)
சுயகுறிப்பேடு
சுயசரிதை வீடு
கட்ட அடித்தளம்
சாதனைகளின்
வீட்டுப்பாடம்
நம்க்குள்ளே சதய
சோதனைக் கூடம்
மின்னஞ்சலில்
மின்னலாய்ப் போன
அன்புக் காற்றை
அடைத்து வைக்கும்
இதயம்
இப்புத்தகமே வரம்
புத்தரின் போதி மரம்
இம்மையில் எமது
நன்மை தீமைகட்கு
மறுமையில் பட்டோலை
இஃதொரு நகலோலை
கடன்பட்டார் நெஞ்சம்
கலங்காதிருக்க இதன் பங்கு
உடன் எச்சரிக்கும்
அபாயச் சங்கு
க்தைகளின்
புதையலாகும்
கவிதைகளின்
விதைகளாகும்
எழுதுகோலின்
கூர்முனையை
உழுதிடும் ஏர்முனையாக்கி
சுயகுறிப்பு விதைத்திடு
மரணத்திற்குப் பின்னும்
வாசிக்கப்படும்; இந்த
மரத்தின் ஆக்ஸிஜன்
ஆக்கங்கள் சுவாசிக்கப்படும்
“”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
—
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
அலை பேசி: 00971-50-8351499