மரணத்தைக் கண்டு
அஞ்சினாலும்
கெஞ்சினாலும்
மரணம்
கட்டித்தழுவாமல்
கடப்பதில்லை
எந்தநேரத்திலும்
மரணிக்கப்போகும்
நமக்கு
அது
எப்போது என்பது
மட்டும்
திரையிடப்பட்டிருக்கிறது
திறந்திருந்தால்
மரணபீதியில்
ரணமாகும் மனித
வாழ்க்கைகள்
இயல்பாய்
தழுவவேண்டிய
மரணத்தை சிலர்
இனம்
மனம்
மதம்
நிறம்
மொழி
பொருள்
வறுமை
இவைகளுக்காக
பொறுமையிழந்து
இன்னுயிரை இழப்பதற்கு
இசையும்
தற்கொலை பிரியர்கள்…
தன்னைக்கேட்காமல்
தான் பிறந்தபோது
தன்னை தான் கொலைச் செய்வது
எப்படி பொருந்தும்…
உயிரை விட்டு விடுவதால்
உறவாய் வந்த
பிரச்சனைகள் உலர்ந்து விடுமா…?
உதிர்ந்துதான் விடுமா…?
உயிரைக் கொண்டு
பிரச்சனையை பார்ப்பதைவிட
அறிவைக் கொண்டு
பார்வையிட்டால்
அறவழிப் பிறக்கும்
அஞ்ஞானம் விழக்கும்
எந்த எண்ணத்தில்
இறக்கின்றோமோ
அதே எண்ணத்தில்
எழுப்பப் படுவோம்
என்கிறது இஸ்லாம்…
உடலை மாய்த்துக் கொள்வதால்
உள்ளம் அமைதிப் பெறுவதில்லை
உடலை வைத்துதான்
உண்மை விளங்கமுடியும்
சுவரை வைத்து
சித்திரம் போல்…
தன்னை மாய்த்துக் கொண்டு
சார்ந்தவர்களுக்கு
சந்தாபம் தந்துவிட்டு
கோழையாய்
உயிர்விடுவதை விட
உடையவர்களுக்கு
உறுதுணையாய்
உணவாய் உணர்வாய்
உணர்ச்சியாய் உரிமையாய்
உயிர்த்தந்து
வாழ்வதற்கு
உங்களை
தற்கொலை செய்துக்கொள்ளுங்கள்…!
—
2/15/2009 02:57:00 AM அன்று கவிவனம் இல் கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI ஆல் இடுகையிடப்பட்டது
kiliyanurismath@gmail.com