கு(கொ)டை!

கவிதைகள் (All)

வண்ண வண்ணக் குடை
வகை வகையாய் குடை

எண்ண எண்ண இனிக்கும் குடை
எழிலாய்த் தோற்றமளிக்கும் குடை!
மழைக்காலத்தில் காக்கும் குடை
மனதிற்கேற்ற வகையில் குடை
மழைக் கொட்ட கொட்ட தினமும்
மகிழ்ந்தே நனையும் வண்ணக்குடை!

மக்கள் நலம் காக்கும் குடை
கருப்பு நிறங்களில் நிறைந்த குடை
கணக்கிலடங்கா நிறத்தில் குடை
கண்ணைக் கவரும் வகையில் குடை!

குடையைப் போல நாளும் – நாம்
கொடையாய் இருப்போம்! – பிறர்
படையை எதிர்த்து வெல்ல – ஓர்
குடையின் கீழ் வலுவாய் இருப்போம்!!!


A.Ahamed Ismathullah Sait
Camp@Gulbarga-585 104
CELL : 0091 94804 83943

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *