General News
ஜனவரி 28, மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் தாயகம் திரும்புகிறார்
துபாய் : அமீரகத்தில் மூன்று வார கால சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்கள் 28.01.2011 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஏர் அரேபியா விமானம் மூலம் ஷார்ஜா விமான நிலையத்தில் இருந்து தாயகம் திரும்புகிறார்.
அமீரக சுற்றுப்பயணத்தின் போது கோட்டைப் பள்ளிவாசல், ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, துபாய் தேரிருவேலி சுன்னத் வல் ஜமாஅத், கொட்டிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷன், சுன்னத் வல் ஜமாஅத் பேரவை, ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், துபாய், ஷார்ஜா, மூன் தொலைக்காட்சி நிகழ்ச்சி துபாய் மற்றும் அபுதாபி, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிகழ்வில் கலந்து கொண்டு மார்க்க விளக்கவுரை நிகழ்த்தினார்.
அன்னாரது தாயகப் பயணம் சிறப்புற அமைந்திட துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
U.A.E.,Contact No.00971 55 57 50 160