தாலாட்டு

இலக்கியம் கவிதைகள் (All) விருதை மு. செய்யது உசேன்
தாய்மையின்
பாசத்தை
காட்டுகின்ற
தாலாட்டு
முன்னோரின்
நிகழ்வினை,
நினைவிற்கு
கொண்டு வந்து,
நயமாக
ஏற்றி வைத்து,
நளினமாக
பாடும் தாலாட்டு!
வீர
தீர சரித்திரத்தை,
சூரமான
சம்பவத்தை,
கதையினை
கானமாக
கூறுகின்ற
தாலாட்டு!
ஏற்றமும்
இறக்கமுமாய்,
எதுகையும்
மோனமுமாய்,
செவிகளுக்கு
இனிமையுமாய்,
விருந்தளிக்கும்
தாலாட்டு!
கானத்தால்
ஞானத்தை ஏற்றி,
தானத்தை
மானத்தை ஊட்டி,
திறத்தை
தீரத்தை தீட்டி,
பயத்தை
பறந்தோட்டும் தாலாட்டு!
அறிவினை
சலவை செய்து,
பக்குவத்தை
பதியச் செய்து,
சொக்கவைத்து
உறங்க செய்யும்,
சுந்தர
மந்திரமே தாலாட்டு!
—————————————————————-
தாய்மையின்
தாலாட்டு
========================
ஆராரோ
ஆரிரரோ,
ஆரமுதே
ஆரிரரோ,
அன்பான
ஆருயிரே,
அழகரே
நீயுறங்கு!
யார்
யாரோ எனை முடிக்க,
போராடி
போட்டியிட்டார்,
பேராற்றல்
கொண்டவரை,
போற்றியே
மணமுடித்தேன்!
அப்பாவின்
முத்திரையாய்,
தப்பாது
நீ பிறந்தாய்,
அப்பாவி
நீயில்லை,
இப்போது
நீயுறங்கு!
செவ்
வாயின் சிரிப்பினிலே,
சிந்துகின்ற
முத்துக்களும்,
சங்கீத
பாடலுக்கே,
சந்தங்களை
போட்டு தரும்,
சொப்பனத்தின்
சுந்தரமாய்,
செப்புகின்ற
கில்லை மொழிக்கோ,
எப்பாடலும்
இணையில்லை,
இப்பாடலில்
நீயுறங்கு!
நாவுரைக்கும்
சொல்லாலே,
நாடாள
பிறந்தவனே,
பாராள
வந்தவனே,
பாடுகிறேன்
நீயுறங்கு!
ஊராரும்
உறங்கி விட்டார்,
உற்றாரும்
மயங்கி விட்டார்,
பெற்ற
எந்தன் கண்மணியே
கொற்றவனே
நீயுறங்கு!
விருதை
மு.செய்யது உசேன்
055 490 8382

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *