General News

இனிக்கும் இஸ்லாம் !

இஸ்லாம் ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பாகும் ! இத்துணை சம்பிரதாய சடங்குகளைக் கொண்டதா இஸ்லாம்? என்று அதனைப் புரிந்துக் கொள்ள பகைவர்களால் அதன் உள்புகுந்து உயர் நோக்கறிய முனையாதவர்களால் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள முடியாது.

பலாப் பழத்தின் மேலுள்ள முட்கள் குத்துமே என்று அஞ்சுபவர்கட்கு அதன் உள்ளே உள்ள சுவையான கனி கிடைக்கும். வாய்ப்பு எப்படி கிடைக்கும்? அதே போன்றே இஸ்லாம், சம்பிரதாயம் எனும் முள் கூட கையிலே குத்தி குருதியைக் கொண்டு வந்து விடுவதில்லை. தெரிந்து கொள்ளும் ஆவலுடன் உட்புகுந்து அறிந்தால், தோள் நீக்கி கனி கிடைப்பது போல் சம்பிரதாயங்களும் வாழும் உலகுக்கு வகையானதுதான்; தேவையானது தான் என ஒத்துக்கொள்ளும் நல்ல சுவையான கனி கிடைக்கும் சுந்தர மார்க்க இஸ்லாம் !

பெருமான் நபிகள் இஸ்லாத்தின் இனிய சங்க நாதத்தை உலகின் நாலா பக்கம் ஒலிக்கச் செய்யப்பட்ட, துயரங்கள் தொட்ட தொல்லைகள், தியாகம் பலகண்ட தியாகத் தழும்புகள் கொஞ்ச நஞ்சமல்ல.

(திருவாரூர் மாவட்டம் அபிவிர்த்தீஸ்வரம் பள்ளிவாசல் முஸ்லிம் மகாஜன சபை பொது வரவேற்பில் பேரறிஞர் அண்ணா அவர்கள்        21-3-1966 அன்று ஆற்றிய உரையின் சிறு துளி இது !

செய்தி சேகரித்து – பாதுகாத்து

உதவியவர் : இலக்கியச் செல்வர்

அபிவையார் : டி.எம்.எம். தாஜுத்தீன் )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button