முதுகுளத்தூரில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம்

முதுகுளத்தூர் :

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் தமுமுக இராமநாதபுரம் தெற்கு மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் தலைமையில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சல்மான் ரபீக் அனைவரையும் வரவேற்றார். தமுமுக தெற்கு மாவட்ட செயலாளர் சம்சு கனி, மமக தெற்கு மாவட்ட செயலாளர் நஜிபுர் ரஹ்மான், தெற்கு மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, மேற்கு மாவட்ட தலைவர் சேக் அப்துல்லா, மத்திய மாவட்ட தலைவர் இப்ராஹிம், கிழக்கு மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், நகர தலைவர்முகைதீன் அப்துல் காதர், நகர செயலாளர் முகமது காசிம், சாகுல் ஹமீது, முதுகுளத்தூர் சேர்மன் ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மமக பொதுச்செயலாளர், மணப்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் சமது, தமுமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், தமுமுக மாநில செயலாளர் சாதிக்பாட்சா,பட்டி மன்ற பேச்சாளர் துரைப் பாண்டியன், சமூக ஆர்வலர், ஜீயாவுதீன், ஐக்கிய ஜமாத் ஜெயினுலாபுதீன், வரலாற்று ஆய்வாளர் உசேன், ஜாஹிர் தமுமுக தலைமை பிரதிநிதி சம்சுதீன் சேட், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.முடிவில் தமுமுக நகர் செயலாளர் அப்துல் ரஹ்மான் கூறினார்.
