முத்துப்பேட்டை பகுதிக்கு தா. பாண்டியன் வருகை

தற்போதைய செய்திகள்

காரைக்குடி – திருவாரூர் –  முத்துப்பேட்டை – அதிராம்பட்டினம் வழி அகல இரயில் பாதை பணியினை உடனே மத்திய அரசும், தென்னக இரயில்வேயும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி ஒரு லட்சம் மக்கள் கலந்துக்கொண்ட ”மாபெரும் மனித சங்கிலி” போராட்டம் திருவாரூர் இரயில்வே நிலையம் முதல் முத்துப்பேட்டை இரயில்வே நிலையம் வரை 5.5.12 மாலை 4 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடைபெற்றது என்ற செய்தியினை இணையத்தள வாசகர்களாகிய நாம் அறிவோம்.
திருவாரூரில் மாலை 4 மணியளவில் இப்போராட்டத்தினை துவங்கி  வைத்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. தா. பாண்டியன் – அவர்கள் ஆவார்கள். போராட்ட பாதையில் கலந்துக்கொண்டு அங்குள்ள பகுதி மக்கள் வெள்ளத்தில் புகுந்தவாறே முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திற்கு இரவு 7.30 மணியளவில் வருகை புரிந்து அங்கு கூடியிருந்த மக்களுக்கு நன்றியினை தெரிவித்து கொண்டார்.
தா. பாண்டியன் அவர்கள் www.muthupet.org செய்தியாளரிடம் அளித்த பேட்டியின் சாராம்சம்..
நமது நிருபர் : மிகப்பிரமாண்டமான இந்த போராட்டத்தினை பற்றி தாங்களின் கருத்து என்ன?
தா.பாண்டியன் : எல்லா மக்களும், எல்லா கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனைத்தும்  கலந்துக்கொண்டு இந்த போராட்டத்தினை வெற்றி பெற செய்து உள்ளனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தான் நான் இங்கு வருகை புரிந்துள்ளேன்.
நமது நிருபர் : இந்த போராட்டத்தினை பற்றி பாராளுமன்றத்தில் பேசக்கூடிய வாய்ப்பு இருக்கும் தானே..?
தா.பாண்டியன் : ஆம்.. நிச்சயமாக.. இருக்கும். இந்த தொகுதி மக்களுக்கு குரல் கொடுக்க அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக இருந்து செயல் பட வேண்டும்.
நமது நிருபர் : இந்த போராட்டத்தினை பற்றி ஊடகத்துறைகளின் கருத்து என்ன..?
தா.பாண்டின் : ஊடகத்துறைகள் அனைத்தும் பாராட்டு தெரிவித்து உள்ளன. முத்துப்பேட்டையில் எந்த செய்தியாளரும் என்னை சந்திக்கவுமில்லை. நான் பேட்டியும் கொடுக்க வில்லை. தாங்களின் www.muthupet.orgஇணையத்தளத்திற்கு மட்டும் தான் பிரத்யேக பேட்டி அளித்து உள்ளேன். ஆகையால் தாங்களின் இணையத்தளத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பட்டுக்கோட்டையில் மிகப்பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அங்கு நான் செல்ல வேண்டிய இருப்பதால் அதிக நேரம் என்னால் முத்துப்பேட்டை மக்களுடன் உரையாற்ற முடியவில்லை என்று மேலும் அவர் கூறினார். ஆகையால் திறந்த ஜீப்பில் உரை நிகழ்த்தாமல் அவர் வந்த காரில் இருந்தபடியே நன்றியினை மக்களுக்கு  தெரிவித்துக்கொண்டார்.
News : Abu Afrin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *