குவைத்தில் CMN ஸலீம் பங்கேற்ற முத்தான முப்பெரும் நிகழ்ச்சிகள்

தற்போதைய செய்திகள்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), 

ஏற்பாடு செய்த

“CMN ஸலீம் & முனைவர் S. பீர் முஹம்மது பங்கேற்ற முப்பெரும் நிகழ்ச்சிகள்!
இஸ்லாமியக் கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி!
“வஹீயாய் வந்த வசந்தம்” கவிதை நூல் வெளியீடு!
புனிதா உம்ரா (2012) பயண போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு!


கமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் பொருளாதார மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து விருந்தினர்களாக வருகை புரிந்த “சமூகநீதி போராளி” CMN முஹம்மது ஸலீம் (நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / ஆசிரியர் சமூகநீதி முரசு மாத இதழ், சென்னை) மற்றும் “பொருளாதார மேம்பாட்டு நிபுனர்” முனைவர் S. பீர் முஹம்மது (பேராசிரியர், கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை) ஆகியோரை கவுரப்படுத்தும் விதமாக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்தமுத்தான முப்பெரும் நிகழ்ச்சிகள் கடந்த 06.04.2012 வெள்ளிக்கிழமைஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு குவைத், ஃகைத்தான், K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் நடைபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்…

சங்கத்தின் தலைவர் மவ்லவீ M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீஅவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில், சகோதரர்“CMN முஹம்மது ஸலீம்” அவர்கள், “கரைந்து போகும் இஸ்லாமியக் கலாச்சாரமும், அதை மீட்டெடுக்கும் வழிமுறைகளும்” என்ற தலைப்பில் சிறப்பானதொரு பேருரையை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், கடந்த காலங்களில் நம்மிடையே பரவி கிடந்த இஸ்லாமியக் கலாச்சாரம், அவற்றினால் ஏற்பட்ட சமூக நலன்கள், அவற்றை சேதப்படுத்திய அந்நிய கலாச்சாரம், அதனால் விளைந்த சமூக தீங்குகள், மீட்டெடுக்கப்பட வேண்டிய நமது பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், அவற்றுக்கான வழிமுறைகள் என பல செய்திகளை வரலாற்று ஒளியில் பட்டியலிட்டு கூடியிருந்த அவையோர் உள்ளங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எழுச்சியுரையை நிகழ்த்தினார்.
அடுத்த நிகழ்ச்சியாக, சில மாதங்களுக்கு முன் புனித இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இளையான்குடி பொற்கிழிக் கவிஞர்மு. ஹிதாயத்துல்லாஹ் (மு.சண்முகம்) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ்ப்பாடும் அழகிய கவிதைத் தொகுப்பாக “வஹீயாய் வந்த வசந்தம்” என்ற நூலை சமுதாயத்திற்கு சமர்ப்பணம் செய்திருந்தார்.
அந்நூலின் வெளியீட்டு விழாவும் இந்நிகழ்ச்சியில் நடைபெற்றது. முனைவர்S. பீர் முஹம்மது நூலை வெளியிட CMN முஹம்மது ஸலீம் பெற்றுக் கொண்டார். நூல் குறித்த விளக்கவுரையை சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., எடுத்துரைத்தார்.
நிறைவு நிகழ்ச்சியாக சமீபத்தில் K-Tic சங்கம் முதல் முறையாக ஏற்பாடு செய்திருந்த புனித உம்ரா 2012 யாத்திரையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கு பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது. இரண்டு சிறப்பு விருந்தினர்களும் பரிசுகளை வழங்கினர்.
சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் M. முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ துஆ ஓத நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன. சிறப்பு விருந்தினர்கள் இருவருக்கும் சங்கத்தின் தலைவர் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார். ஏறக்குறைய 750க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் புனித ஜம்ஜம் தண்ணீர்மற்றும் பேரீத்தம் பழங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
——————————————————————————————————-

செய்தி:

தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),

குவைத்.

துரித சேவை அலைபேசி: (+965) 97 87 24 82

மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com

இணையதளம்: www.k-tic.com

யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *