Month: May 2013
-
உன் ஒருவனுக்கே … எங்கள் சஜ்தா !
‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி உயர் வாழ்வளித்துக் காத்திடுவாய் ! வல்லவனே அல்லாஹ் ! – உனை வணங்கி நானும் போற்றுகிறேன் உதவிடுவாய்…
Read More » -
கல்கத்தா தேசிய நூலத்தில் தமிழ் நூல்கள் !
Belvedere Rd, Alipore Kolkata, West Bengal 700027, India +91 33 2479 1381 www.nationallibrary.gov.in/ தமிழ் மொழி தொகுப்பு தமிழ்ப் பிரிவு 1963 ல்…
Read More » -
சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல்
www. tamilvalarchithurai.org/a/news/2013/05/25/சிறந்த-நூல்களுக்குப்-பரிசு-வழங்குதல்-01012012-முதல்-31122012-வரை சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல் : 01.01.2012 முதல் 31.12.2012 வரை Published Date: May 25, 2013 சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல்…
Read More » -
காகித பூங்கா அமைப்போம்
வல்ல நாயனின் திருப்பெயர் போற்றீ காகித பூங்கா அமைப்போம் மண்ணரைக்கு பூக்கள் தர அன்பிற்கினிய இஸ்லாமிய உடன்பிறப்புகளே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சில தினங்களுக்கு…
Read More » -
இமைகளே … திறவுங்கள் !
கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் வாழ வாழ நல்ல வழிகளுண்டு – நபி வழங்கிய நெறிகளிலே வாரி வாரித் தந்த வைரமுண்டு – அவர்…
Read More » -
ஜும்ஆ நாளின் சிறப்புகள்
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்…
Read More » -
இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி
Thanks to Kaja Magdoom. Annamalai University உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம்…
Read More » -
அன்பே
அன்பே திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com மலர் சூட நீவருவது அழகுதான் ! அதை விட…
Read More » -
தமிழ்க்கல்வி சிறக்க பரிந்துரைகள் சில : முனைவர் மு.பழனியப்பன்
உலகம் முழுவதும் தமிழ் பரவியிருந்தாலும், தமிழர் பரவியிருந்தாலும் தமிழுக்கு எங்கும் இரண்டாம் இடம் என்பதே தற்காலநிலைப்பாடாகும். பொருள் சார்ந்து இயங்கும் இந்த உலகத்தில் படிப்பை முடித்தவுடன் நாளும் பொருளை அள்ளித்தரும் கல்விகளுககுமட்டுமே மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்தச் சூழலில் தமிழைப் படித்தவர்களின் தமிழ்வழியில் படித்தவர்களின்எதிர்காலம் என்பது வரவேற்பு மிக்கதாக இல்லை என்பதே உண்மை. மக்களால் விரும்பப்படுகின்ற அளவிற்குத் தமிழ்க் கல்வி அதிகமானவேலை வாய்ப்புகளை வழங்குவதாக இல்லை. இதனை மாற்ற சமுக மாற்றங்கள் கல்வித்திட்ட மாற்றங்கள் சிலவற்றைச்செய்யவேண்டியுள்ளது. இக்கட்டுரை தமிழகத்தில் உள்ள தமிழ்க்கல்வி முறை சார்ந்து எழுதப்பெற்று இக்கல்வி முறையில் ஏற்படவேண்டியமாற்றங்கள் குறித்துச் சில பரிந்துரைகளை முன்வைக்கின்றது. தமிழகச் சூழலில் தமிழ்வழியில் பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர் எதுவரை அவரின் தமிழ்வழிக் கல்வியைத் தொடர முடியும்என்பது அடிப்படைக் கேள்வி. பி.ஏ(முதண்மைப் பாடம் தமிழ் தவிர) பி. எஸ். ஸி, பி.காம் போன்ற பட்டப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்இளநிலைப் பட்டங்களைத் தமிழ்வழியிலும் எழுதலாம். ஆங்கில வழியிலும் எழுதலாம் என்ற நிலை உள்ளது. இதில் பள்ளிக் கல்வியைத்தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பெரும்பாலும் தமிழ்வழிக்கல்வியை விரும்பிக் கற்று தமிழ்வழியிலேயே தங்களின் பட்டப்படிப்பினைமுடிக்கின்றனர். ஆனால் இவர்கள் எம்.ஏ., எம்எஸ். ஸி ஆகிய மேற்படிப்புகளுக்குச் செல்லுகையில் கட்டாயம் ஆங்கில வழியில் படிக்கவேண்டிய நிலை உள்ளது. இந்நிலைக்கு வரும் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பினைக் கற்ற மாணவர்கள் அதிக அளவில் பயிற்று மொழிச்சிக்கலுக்கு ஆளாகின்றனர். தொடர்ந்து பணிக்குச் செல்லும்போது. தமிழ் வழியில் கற்ற ஒருவர் தான் பணிக்குப் போகும் கல்வி நிறுவனத்தில் ஆங்கில வழிக்கல்விஇருக்கும்போது அவரின் தமிழால் பெற்ற பாட அறிவு போதுமானதாக இருப்பதில்லை. மேலும் வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போதும்வேறு நாடுகளுக்குச் செல்லும்போதும் தமிழ் பயிற்று மொழிக்கல்வி அவர்களுக்குப் பயன்படாமல் போய்விடுகின்றது. அங்கேகைகொடுப்பது தக்கித் தடுமாறிக் கற்ற முதுகலைப் பட்டப் படிப்பின் ஆங்கில வழிக்கல்வியே ஆகும். இக்குறையைப் போக்க முதுநிலைப்படிப்புகளையும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என்று கொண்டுவரலாம். இதனைத் தொடர்ந்து முனைவர் பட்டப்படிப்புவரை தமிழ் வழிக் கல்வியைத் தொடரவேண்டும். அதே நேரத்தில் ஆங்கில அறிவையும் தமிழ்வழிக்கல்வி கற்போர் மேம்படுத்திக் கொள்ளவேண்டும். தமிழ் வழியில் படிக்கும் ஒரு மாணவர் பொறியியல் படிப்பில் சேர்ந்தால் சேர்ந்த அன்று முதல் அவர் ஆங்கில வழிக்கல்விக்குத்தன்னை வடிவமைத்துக் கொள்ள வேண்டியவராகின்றார். இப்பொறியியல் படிப்பில் ஆங்கிலத் தாள் இரு பருவங்களுக்கு மொழி சார்ந்துவைக்கப் பெற்றுள்ளது.. இந்தத் தாளுடன் தமிழையும் ஒரு தாளாக இணைத்தால் பொறியியல் மாணவரகளிடத்தில் தமிழ் ஆர்வத்தைவளர்க்க இயலும். ஆங்கில வழி கற்கும் ஒரு சில மாணவர்களையாவது தமிழார்;வம் கொண்டவர்களாக மாற்ற இயலும். தற்காலத்தில்அதிக அளவில் பொறியியல் துறைக்கு நுழையும் மாணவர்களைத் தமிழின்பால் ஈரக்க முடியும். இதேநிலையில் மருத்துவப்படிப்பும் மருத்துவம் சார்ந்த மற்ற படிப்புகளின் நிலையும் உள்ளது. மதிப்பு மிக்கக் கல்வி என்றழைக்கப்படும்இக்கல்விகளில் மொழிப்பாடம் என்ற நிலையில் தமிழுக்கு ஒரு தாளை வழங்கிட ஆவன செய்வது தற்காலத்தில மிக முக்கியமாகஅரசிடம் வற்புறுத்தப்படவேண்டிய ஒன்றாகும். பள்ளிக் கல்வியில் இந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி படிக்கும் வகுப்புகளைத் தொடங்கலாம் என்ற முடிவுபள்ளிக்கல்வியில் தமிழ்வழிக் கல்விக்கு தரப்படும் மற்றொரு சவால். தமிழை மட்டுமே தமிழில் படிக்கும் நிலையில் தமிழ் ஒரு மொழிசார்ந்த படமாக மட்டும் அமைந்துவிடும் போக்கு எதிர்கால தமிழ் சந்ததிக்கு நேர்;ந்து விடும் வாய்ப்பிற்கு இம்மாற்றம் வழிவகுக்கும். சில பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நான்கு பருவங்களுக்குப் பகுதி 1 தமிழ் படிக்கும் வாய்ப்பினைத்தந்துள்ளன. சில பல்கலைக்கழகங்களில் பகுதி 1 தமிழ் இரு பருவங்களுக்கு மட்டுமே உள்ளது. சில பல்கலைக்கழகங்களில் பகுதி 1 தமிழ்என்ற பகுதியே இருப்பதில்லை. குறிப்பாக வணிகவியல் பட்டப்படிப்பு சார்ந்த மாணவர்கள் பகுதி 1 தமிழுக்குப் பதிலாக வணிகத் தமிழ்என்ற ஒன்றைக் கற்கின்றனர். இந்த முறையை ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழின்பால் பற்றுக் கொண்ட எந்த அரசாவது அனைத்துத்தமிழகப் பல்கலைக்கழகங்களிலும் நான்கு பருவங்களிலும் பகுதி 1 தமிழ் இருந்தாக வேண்டும் என்ற நடைமுறையை உருவாக்கவேண்டும்.இன்னும் பட்ட படிப்புக்கு உரிய ஆறு பருவங்களுக்கும் பகுதி 1 தமிழ் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். மேலும் இயன்றால்அனைத்து முதுகலைப் படிப்பிற்கும் தமிழ் தாள் இருக்க ஆவன செய்ய வேண்டும். தமிழ் படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பு சதவீதம் என்பதும் தமிழ் படிக்கும் மாணவர்களைத் துவண்டு போகச் செய்வதாகவேஉள்ளது. பள்ளி இறுதி படித்த ஒரு மாணவர் உடன் ஆசிரியப் பயிற்சிப் பாடப்பிரிவி;;ல் சேருகிறார். இவர் படித்துமுடித்தவுடன் ஆசிரியராகஅரசாங்கப் பணி கிடைத்துவிட்டது என்ற சூழலில் இவர் மேலும் படிக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். இவர் தேர்ந்;தெடுக்கும்கல்வி வாய்ப்பு என்பது அஞ்சல்வழிக்கல்வி அல்லது தொலைதூரக்கல்வி என்பதாக இருக்கும். இதி;ல் இவர் விருப்பப்பட்டுப் படித்துத்தமிழில் பி.ஏ, பி.எட், எம்.ஏ என்ற படிநிலைகளைக்கடந்தால் இவர் தமிழாசிரியராக பதவி உயர்வு பெறலாம். தமிழகத்தில் இன்றைய நிலையில் கொண்டுவரப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வுகள் போன்றன எவ்வடிப்படையில் காலியிடங்களைக்கணக்கிடுகின்றன என்றால் பதவிஉயர்வுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு விழுக்காடும் நேரடி நியமனத்திற்குக் குறிப்பிட்ட அளவு விழுக்காடும்தரப்பெறுகின்றன. இதி;ல் தொடக்கப்பள்ளி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் போன்றவற்றின் பரிந்துரையால் பதவி உயர்வுக்கானவிழுக்காடு கூட்டப் பெற்றுள்ளது. அதாவது காலியாகும் இடங்களில் தோராயமாக 60 விழுக்காடு பதவி உயர்வாகவும் 40 விழுக்காடு நேரடிநியமனம் என்ற நிலையிலும் நிரப்பப்பட வேண்டும் என்ற நிலை இருப்பதாகக் கொள்வோம். அப்படியானால் நேரடியாகத் தமிழைக்கல்லூரியில் படித்து நல்ல மதிப்பெண் வாங்குகின்ற மாணவர்களின் பணிவாய்ப்பு குறைவதை இது தெற்றென விளக்குகிறது. ஏற்கனவேவேலையில் இருக்கும் ஆசிரியப் பயிற்சி முடித்தவர் தான் சேர்ந்த ஆரம்பப் பணியையும் காலியாக்குகிறார். அதுமட்டும் இல்லாமல்தொடர்ந்து பள்ளி கல்லூரி என்று தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கினைத் தாண்டும் தமிழ் மாணவரின் பங்கிலும் கை வைக்கின்றார்.இந்தச் சூழல் மாறவேண்டுமானல் பதவி உயர்வு வழி அளிக்கப்படும் தமிழாசிரியர் தகுதியின் விழுக்காட்டு அளவை மிகக் குறைவாக ஆக்கவேண்டும். இதன் காரணமாக இருபது ஆண்டுகளாகப் படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் தமிழ் மாணவர்கள் வேலை பெற இயலும். தற்போது வந்துள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுகள் வரவேற்கத்தக்கன என்றாலும் அவை பெறும் காலிப்பணியிடங்கள் பற்றிச் சேகரிக்கும்தகவல்களில் தமிழை நம்பிப் படித்த மாணவர்களின் முன்னேற்றும் போக்கு தேவை என்பதை அரசு கவனிக்க வேண்டும். தமிழ்க்கல்வி – இன்றைக்குத் தமிழகத்தி;ல் தமிழ்ப்பட்டப் படிப்பு என்பது இரு நிலையில் செயல்பட்டு வருகின்றது. பி.லிட், பி. ஏ என்றஇரு பட்டப் படிப்புகள் வழங்கப் பெற்று வருகின்றன. இவை இரண்டுக்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் கிடையாது. ஒரேவேறுபாடு பி.லிட் படிப்பவர்கள் தொல்காப்பியத்தைப் படிப்பார்கள். பி.ஏ படிப்பவர்கள் தொல்காப்பியத்தினை விடுத்து அதற்கு ஈடானநிலையில் வேறு இலக்கணங்களைப் படிப்பர். இந்த இரண்டு பட்டப் படிப்புகளையும் ஒன்றாக ஆக்கிவிடவேண்டும். அவ்வாறு ஒன்றாகஆக்கும்போது பி.லிட் என்ற தனித்த அடையாளம் கெடாமல் அந்தப் பட்டப் படிப்பை நிலைநிறுத்த வேண்டும். பி.லிட் படிக்கும் மாணவர்கள்புலவர் பயிற்சிப் பட்டயம் (டி.பி.டி) என்ற ஒன்றைப் பெற இயலும். பி.ஏ படிக்கும் மாணவர்களில் பத்துவிழுக்காட்டினர் மட்டும் இந்தக்கல்வியைப் பெற இயலும். இந்தப் படிப்பினைப் படித்தால் தமிழாசிரியராக ஒருவர் பதவி பெற இயலும். ஆறுமாத கால இந்தப் பயிற்சிவகுப்பு படித்தவர்கள் பி.எட் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த கட்ட பணி உயர்விற்கு அவர் பி. எட் படிக்கவேண்டும் என்பதுதேவை. எனவே தமிழ்ப்பட்டம் ஒன்றாக ஆக்கப்படும் சூழலில் அனைத்துத் தமிழ்மாணவர்களும் டிபிடி படிப்பினை முடிக்கும் தரம் பெறுவர்.இது சிறு மாற்றம் என்றாலும் இதன் விளைவு பெரிது என்பதை உணரவேண்டும். அடுத்துத் தமிழ்க்கல்வி பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. பல்கலைக்கழகங்களில் முதன்மைப்பாடம், துணைமைப்பாடம் என்றநிலையில் தமிழ்ப்பட்டப்படிப்புகள் பிரிக்கப்படுகின்றன. முதன்மைப் பாடத்திற்கு உரிய தாள்கள் ஓரளவிற்கு அனைத்துப்பல்கலைக்கழகங்களிலும் ஒரே தரநிலை நிலவுகின்றது. துணைப் பாடத்தில் இந்நிலை இல்லை. அவரவர்களுக்குத் தோன்றிய நிலையில்துணைப்பாடங்கள் வைக்கப்படுகின்றன. அதனைச் சரி செய்ய வேண்டும். அக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் தமிழோடு இசை. கலை சிற்பம்சித்த மருத்துவம் வானவியல் போன்ற பல துறைகள் அறிந்தவர்களாக இருந்தனர். காரணம் அவர்கள் கற்ற தமிழ்க்கல்வி வெறும் பாடம்சார்ந்ததாக மட்டும் இல்லாமல் வாழ்வு பண்பாடு சார்ந்ததாக உள்ளது. தற்காலத்தில் வெறும் புத்தகக்கல்வியாக மட்டும் தமிழ் ஆக்கப்பெற்றுள்ளது. இசைத்தமிழ், சித்த மருத்துவம் போன்றனவற்றை மாணவர்களுக்கு பாடமாக்கலாம் என்றால் அதனைப் படித்த ஆசிரியர்கள்எவரும் இல்லை. இந்தச் சூழலில் தமிழ்க்கல்வியை வெறும் புத்தகத்தை மனப்பாடம் செய்யும் கல்வியாக இத்தலைமுறைமாற்றியிருக்கிறது. இன்னும் தேய்வாக அம்மனப்பாட அறிவு கூட தற்போது அளவில் குறைந்து வருகிறது என்ற நிலையில்தமிழ்ப்படித்தவர்களுக்கு தமிழ் .இலக்கண இலக்கியம் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்பதே கிடைக்கப் பெறும் முடிவாக உள்ளது. எனவே தமிழ் பட்டப்படிப்பினைத் தரப்படுத்த வேண்டும். தமிழ் மாணவர்களுக்கு இசையறிவினை ஊட்ட மாவட்ட இசைப்பள்ளிகளுடன்இணைந்து சில செயல்பாடுகளில் இறங்கலாம். யோகா நிறுவனங்களுடன் இணைந்து யோகக்கலை கற்றுத்தரலாம். சித்தமருத்துவர்களுடன் இணைந்து சித்த மருத்துவம் கற்றுத்தரலாம். இவையெல்லாம் தற்போது கூடுதல் பணிப்பளுக்கள். இவற்றை உட்புகுத்திஒரு தமிழ்க்கல்வியை உருவாக்கினால் தமிழ் மறுமலர்ச்சி பெறும்.…
Read More » -
புனித மதிநாவில் திருச்சி டவுண் காஜிக்கு வரவேற்பு
புனித மதிநா : சவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டுள்ள திருச்சி டவுண் காஜி மௌலவி ஜலீல் சுல்தான் மன்பஈ க்கு 22.05.2013 புதன்கிழமை மாலை…
Read More »