Month: March 2013

  • கோபம் !

                                            …

    Read More »
  • அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம்

    அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம் தமிழ்மாமணி ஹிதாயதுல்லாஹ் ================================== அம்மா ….! என்னை கருவினில் சுமப்பது போதாதென்று ஒயிரிலும் சுமக்கும், உத்தமியே ….! மண்காயப் பொறுக்காத மழைவானப்…

    Read More »
  • நல்லது நடந்தால் சரி…

    அரசுத் துறைகளில் குறித்தகாலத்தில் பொருள் மற்றும் சேவை பெறும் உரிமை மற்றும் குறைதீர் சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் சுருக்கமாக “சேவை பெறும்…

    Read More »
  • பறைவைகளே !. பதில் சொல்லுங்கள் !

    வலைத்தளத்தில் உலாவரும் பதிவுகளைப் பார்க்கும்போதும், அதற்குத் தூபம் போடும்வகையில் ஊடகங்களின் ஊதுகுழல் பொறுப்பற்று வேலை செய்வதைப் பார்க்கும்போதும், நமதுநாட்டின் அப்பாவி மக்களின் மனதில் முஸ்லிம் சமுதாயத்தின் மீதான வெறுப்பினை வளர்க்கும்ஒரு சதிவேலை அறங்கேறிக் கூத்தாடுவதாகத்தான் தோன்றுகிறது. தெளிவான சிந்தனையுள்ள தேசபக்தர்களின் ஆதரவில்லாவிட்டால், பல கேடுகள்விளைந்திருக்கும், நல்லவர்களை நாடெங்கும் விதைத்து வைத்த வல்ல இறைவனைஇத்தருணத்தில் நான் புகழ்கிறேன். நன்றி கூறுகிறேன். புகழுக்குறிய இறைவன் காட்டிய நேரான பாதையை உள்ளத்தாலும் செயலாலும் கொள்ளாதுவெளித்தோற்றத்தால் மட்டும் கொண்டு வெறிபிடித்தலையும் கயவர்களையும் கண்டிக்கிறேன்.தீமை ஒழிய வேண்டும், அது நன்மையைக் கொண்டு மட்டுமே வெல்லப்பட வேண்டும்.அதுதான் நிரந்தர வெற்றி. இன்று ஊடகங்கள் வெடிக்கும் குண்டுகளால் துளைக்கப்பட்டு மனத்தளவில்குற்றுயிராய்க்கிடக்கும் உணர்வில் பலர். ஊடகங்களோ அடையாளம் காட்டுவதுமுஸ்லிம்களை.  இதுதான் காரணம், ஆக யாருக்குமே வெறுப்பு வருவது இயல்பு.  இதுவெடித்து வைக்கும் மீடியாக்களுக்கும் தெரிந்த உண்மைதான் (சில சக்திகளின் நோக்கமும்அதுதானாயிருக்கலாம்). நமது முறையீடெல்லாமே படைத்தவனோடுதானே? ஆகவே அழுதே கேட்போம்! “நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா !” (கண்ணதாசன்) இன்று உள்ளவர்க்கெதிராய் சாட்சிகள் ரெண்டு ஒன்று (மிரட்டப்பட்ட)  உங்கள் சாட்சி ஒன்று (மீடியாவின்) வஞ்சகக் காட்சியம்மா !! ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லார் அவனையே தொழுது கேளுங்கள் ! அவனன்றி நமக்கு வேறு ஆருதல் இல்லை! பறைவைகளே !… பதில் சொல்லுங்கள் மனிதர்கள் பரப்பும் செய்தி உண்மையில்லையே…

    Read More »
  • ஆமை வேகத்தில் பி.எஸ்.என்.எல்.

    முதுகுளத்தூர்: முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, சாயல்குடி பகுதிகளில் 10 நாள்களாக, பிஎஸ்என்எல்., “வைமாக்ஸ்’ இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல், வாடிக்கையாளர்கள் அவதிபட்டுள்ளனர். கடலாடி, கமுதி, சாயல்குடி, வாலிநோக்கம் உட்பட…

    Read More »
  • மை

    த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு. ஹிதாய‌த்துல்லாஹ் இளையான்குடி சிவ‌கெங்கை மாவ‌ட்ட‌ம் தாலாட்ட‌ தாய்மை வேண்டும் ! த‌லைநிமிர‌ நேர்மை வேண்டும் ! பாராட்ட‌ திற‌மை வேண்டும் பாட்டெழுத‌ புல‌மை…

    Read More »
  • தொடரும் தற்கொலைகள்..தீர்வு என்ன? – ஹூசைன் பாஷா, துபாய்

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த இரண்டு தற்கொலைகள் நம் கவனத்தை ஈர்த்து நம்மை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.முதலாவதாக, நெல்லையைச் சேர்ந்த ஆஷிக் என்ற பல் மருத்துவர் மன உலைச்சல் காரணமாக தன்னைத் தானேகழுத்தை அறுத்து கொடூரமான முறையில் தற்கொலை செய்துக் கொண்டார்.  இரண்டாவது, நாமக்கல்லைச் சேர்ந்தபஷீர் அஹமது என்ற பெரியவர் தன்னுடைய குடும்பத்தினர் தன்னை சரியாக கவனித்துக் கொள்ளாததால்மின்சாரத்தை உடலில் பாய்ச்சிக் கொண்டு இறந்துள்ளார்.   இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து, அமீரகத்தில் குடும்பத்துடன் வசித்துவரும் ஒரு குடும்ப பெண்தாயகத்திலிருக்கும் தன் சகோதரர் மூலமாக தொடர்புகொண்டு உடனடியாக என்னுடைய கொடுமைக்காரகணவனிடமிருந்து மீட்டு என்னையும், குழந்தைகளையும் ஊருக்கு அனுப்பிவையுங்கள், இல்லையென்றால்தற்கொலையைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளதைப் பார்த்தால் மக்கள் மத்தியில்பிரச்சனைக்கு தீர்வு தற்கொலைதான் என்று பரவலாக பதிந்துள்ளதை காண முடிகிறது. சம்பந்தப்பட்ட அந்தபெண்ணை சட்ட ரீதியாக மீட்டு தாயகத்திற்கு அனுப்புதற்கான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருக்கிறோம்.   தற்கொலைகளையும், அவற்றிற்கான உணர்வுகள் மேலோங்காமல் தடுப்பதற்கான வழி முறைகள்என்னவென்பதையும் ஆராய வேண்டிய கடமை நமக்கு உள்ளது. நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும் அளவிற்குகொடூரமான இந்த செயலைக் குறித்து, ”உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளாதீர்கள்’ எனதிருக்குர்ஆன் மிக ஆழமாக எடுத்துரைக்கின்றது. ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாதநிலைதான் வருத்தமளிக்கக் கூடியதாக இருக்கிறது.   உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனடியாக தீர்வு வேண்டி மருத்துவரை அணுகக் கூடிய நாம், மன ரீதியானபிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் மன அழுத்தத்தில்இருந்தால் அதை கண்டறிந்து அதற்கான தீர்வை எடுப்பது நம் கடமை.35 கோடிக்கும் அதிகமானோர்  உலக அளவில்மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அக்டோபர் 10-ம் தேதி நடந்த உலக மன நலஆரோக்கிய தினத்தில் தெரிவித்துள்ளது. தொடக்க நிலையில் உள்ள பிரச்சனைகளுக்கு மன நல ஆலோசகரிடம் சென்றால் கவுன்சிலிங் மூலம் பிரச்சனையைதீர்க்கலாம். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருப்பதே நிறைய பேருக்கு தெரியாது என்பது மறுக்கமுடியாத உண்மை.சற்றே தீவிரமாகியுள்ள மன பிரச்சனைகளுக்கு மருந்து, மாத்திரைகளுடன் கூடிய ஆலோசனை தேவைப்படலாம்.நமது சமூகத்தில் இத்துறையில் நிபுணர்களை அதிகமாக உருவாக்க வேண்டும்.   குடும்பத்தினரால் கைவிடப் பட்டவர்களுக்கு மன ரீதியான ஆறுதலுடன் சேர்த்து பொருளாதார ரீதியானஒத்துழைப்பை அளித்து அவர்கள் நம்பிக்கையுடன் உலகில் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதிகமான தற்கொலைகள் குடும்பப் பிரச்சனைகள் காரணமாகத்தான் ஏற்படுகின்றன. கணவன்,மனைவியிடையே பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை, ஒருவொரை மற்றொருவர் புரிந்துக்கொள்ளாமை போன்றவையே முதற்காரணங்களாக இருக்கின்றன.   இதுபோன்ற தற்கொலைகளைத் தடுக்க சமூக இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும் மக்கள் மத்தியில்விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்துவற்கு உடனடியாகஅனைத்து பகுதிகளிலும் ஏற்பாடு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    Read More »
  • சென்னையில் ஒய். ஹ‌பீபுக்கு பேத்தி

      முதுகுள‌த்தூர் ஒய். ஹ‌பீப் ம‌க‌ன் ச‌வுதி அரேபியாவில் ப‌ணிபுரிந்து வ‌ரும் சைய‌து மூமினுக்கு பெண் குழ‌ந்தை இன்று மாலை 5.30 ம‌ணிக்கு சென்னை ம‌ருத்துவ‌ம‌னையில் பிற‌ந்துள்ள‌து.…

    Read More »
  • மனிதனின் தேவை ! – ‘மன அமைதி’

    மனிதனின் தேவை ! – ‘மன அமைதி’ ( மவ்லவி அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவி )   “அறிந்து கொள்ளுங்கள் ! அல்லாஹ்வை தியானிப்பது…

    Read More »
  • ஒவ்வொரு நாளும் பெண்கள் தினமே.!

    மறைப்பதில் அல்ல, இயன்றவரை திறப்பதில் தான் சுதந்திரம் என்பதாக திணிக்கப்படுகிறோம்.! ஆடை அணிவதில் அல்ல.! , இயன்றவரை களைவதே நாகரிகம் என உலரா சலவை செய்யப்படுகிறது நம்…

    Read More »
Back to top button