General News
Trending
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் மறைவுக்கு டாக்டர் ஏ. அமீர் ஜஹான் மலர் தூவி மரியாதை
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் மறைவுக்கு டாக்டர் ஏ. அமீர் ஜஹான் மலர் தூவி மரியாதை
சென்னை :
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் மறைவுக்கு அகில இந்திய வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தின் தலைவரும், ஏ.ஜே.டிரஸ்ட் எஜுகேஷனல் கன்சல்டன்சி மற்றும் ஏ.ஜே. சுபைதா மெடிக்கல் செண்டரின் நிறுவனருமான இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த டாக்டர் ஏ. அமீர் ஜஹான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், ஏ.ஜே.டிரஸ்ட் எஜூகேஷனல் கன்சல்டன்சி அலுவலகம், ஏ.ஜே. சுபைதா மெடிக்கல் செண்டர் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் மன்மோகன்சிங் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.