தமிழ்நாட்டில் வாக்கிங் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு: 5 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் பாதிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வாக்கிங் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு: 5 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் பாதிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் வாக்கிங் நிமோனியா அதிகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குளிர்காலம் காரணமாக தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளியால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இதனிடையே வாக்கிங் நிமோனியாவும் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 5 வயது முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாக்கிங் நிமோனியா பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
வாக்கிங் நிமோனியா என்பது தீவிர தன்மை குறைந்த நிமோனியா ஆகும். சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல், உடற்சோர்வு ஆகியவை இதன் அறிகுறியாகும். பொதுவாக வாக்கிங் நிமோனியா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை இருக்காது. ஆனால் தற்போது வாக்கிங் நிமோனியா பாதிக்கப்பட்டவர்கள் அவசர பிரிவில் சேர்க்கும் அளவுக்கு அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.