தமிழர் சிறப்பு!
தமிழர் சிறப்பு!..
எங்களுக்கு விழா பொங்கல் தானே..
இனிக்கும் இசைக்கு மார்கழித் தேனே..
வகுக்கும் பசிக்கு உழவில் மாடே
வருத்தங்கள் நீங்க சித்திரை ஆண்டே!
குவிக்கும் கைகளில் கும்பிடுவோமே..
கொண்டாட்டங்கள் நாட்கள் தோறுமே
ஆடி பிறந்தால் ஆறுகள் செழிக்கும்..
ஐப்பசி மாதமோ மழையில் நனைக்கும்!
கார்த்திகை வரவாய் விளக்குகள் ஏற்றல்
கண்மணி உறவாய் ஏரி குளங்கள் நிறைக்கும்!*
எங்கள் நாட்டில் நாங்களே தலை இனி!
எங்கள் பாட்டில் வடிக்கும் தேன் துளி
எங்கள் காட்டில் இனிக்கும் மாங்கனி
எங்கள் வீட்டில் ஆடும் தொட்டிலடி!
பலப்பல பலப்பல பசிக்கும் உணவுகள்
பலப்பல பலப்பல ஆடும் ஆட்டங்கள்
பலப்பல பலப்பல போடும் வேசங்கள்
பல பல நாளும் இறைமையை போற்றல்கள்!
நாங்கள் எழுந்தால் நடைகளும் திறக்கும்
நாங்கள் மகிழ்ந்தால் கொடையென கொடுக்கும்
நாங்கள் பார்க்க கடலன்னை சுமக்கும்!
நாங்கள் எழுந்தால் கூனல்கள் பறக்கும்!
பொன்னும் எங்கள் கண்பட உருக்கும்
பொழும் எங்கள் உழைப்பால் சிறக்கும்
கல்லும் எழுந்து தமிழாய் படிக்கும்!
கயமைத் தனங்களை தள்ளிட உரைக்கும்!
நாளும் மாதங்கள் எங்களின் படிப்பு!
நலங்களும் விளைச்சலும் எங்கள் வளர்ப்பு!
ஆடை அணிகள் எங்கள் அளிப்பு!
ஆசையும் கனவும் தமிழரின் உழைப்பு!
அன்பும் பாசமும் கொடிகளை ஏற்றும்
அனைத்தும் பகர நூல்களாய் நூற்கும்!
இருக்க இனிக்க ஆயிரம் விளையாட்டு
இருந்து படைக்க வீரமே தாலாட்டு!
ஐம்பூதங்கள் வாழ வணங்கிடும் வழக்கம்..
அடுப்பாய் எரித்து சமைத்துண்ணும் போக்கு
ஆட்சியாய் அமைத்து நின்றது காவல்!
நாளும் எங்கள் நாழிகை கணிப்பு
நலங்களை பேசவே எடுத்தோம் வகுப்பு!
வல்லோர் தமிழர் ஆய்ந்திட்ட அறிவு!
வளமைகளோடு கையை பிடித்தோர்!
சொன்னார் ஞானியர் அண்டங்கள் கடந்து
சோதனை விட்டு எழுகவே அணிந்து!
பட்டது போதும் பல்கலை மறந்து
பாவித்தெழுவோம் தமிழர் வெற்றியை நினைந்து!
பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி