கர்மவீரர் காமராஜர்
கர்மவீரர் , காலா காந்தி, படிக்காத மேதை , கிங் மேக்கர் , பெருந்தலைவர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட காமராஜர் , 1903ம் ஆண்டு ஜூலை திங்கள் 15 ம் நாள் தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் என்ற ஊரில் குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் காமாட்சி . தாயார் செல்லமாக வரை ராஜா என்றே அழைத்தார் . இவையிரண்டும் சேர்ந்து மருவி அவரது பெயர் காமராஜர் என்றானது.
ஆம் .விருதுநகர் நமக்கு கிடைத்த விருதல்லவா அவர்.
இளவயதிலேயே தந்தையை இழந்ததால் பள்ளி செல்ல இயலாமல் போனதால் ஒரு துணிக்கடையில் பணிக்கமர்ந்தார். பத்திரிகைகள் மற்றும் வானொலி மூலம் காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்களையும் , சுதந்திர போராட்ட நிகழ்வுகளையும் கேட்டு மனதில் தேசப்பற்று உருவாயிற்று . 1919ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பற்றிய செய்திகள் அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியதால் , அவர் மஹாத்மா காந்தி அவர்களின்மேல் ஈடுபாடு கொண்டு 1920ல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரானார்.
1930ல் நடைபெற்ற வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு அவர் சிறை சென்றார். .
இவரது தேசபக்தியையும், அரசியல் ஆர்வத்தையும், அஞ்சா நெஞ்சத்தையும் பார்த்த காங்கிரஸ் தலைவரம் , இவரது அரசியல் குருநாதருமான சத்தியமூர்த்தி அவர்கள் 1936ல் இவரை தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராக்கினார்.
1940கலீல் நடந்த ஒத்துழையாமை இயக்கம், 1942ல் நடந்த ஆகஸ்ட் புரட்சி ஆகியவற்றில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றார். சுமார் 20 முறைக்குமேல் சிறைக்குச் சென்ற தேசத் தியாகி , காமராஜர் அவர்கள். 1940ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானார். 1963 வரை அப்பதவியில் இருந்தார். 1964 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ் அக்ராசனர் ( தலைவர் ) ஆக பதவி வகித்தார்.
1953ல் தமிழ்நாடு முதல்வராக இருந்த திரு ராஜாஜி அவர்கள் கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது திரு ராஜாஜி , திரு சி. சுப்பிரமணியம் அவர்களை முதலமைச்சராக முன் மொழிந்தார், அவரை எதிர்த்து திரு காமராஜ் அவர்கள் சட்டசபை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று முதல்வரானார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்ரமணியம் , பக்தவச்சலம் ஆகியோரை தன அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். தியாகி கக்கன் அவர்களின், நேர்மை, தியாகம், உழைப்பு எளிமை ஆகிய பண்புகளை அறிந்து அவருக்கு முக்கிய இலாக்காக்களின் அமைச்சர் பதவி வழங்கினார்.
1937 , 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
1946ல் சாத்தூர்- அருப்புக்கோட்டை MLA ,
1952ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் MLA
1954ல் குடியாத்தம் MLA .
1969 & 1971ல் நாகர்கோவில் MP அக்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1967ல் இவர்மேல் இருந்த பொறாமை மற்றும் கோபம் காரணமாக இவரை வீழ்த்த ராஜாஜி அவர்கள் திமுகவுக்கு ஆதரவளித்து , தனது சொந்தத் தொகுதியான விருதுநகரிலேயே காமராஜரைத் தோற்கடித்தது பெரும் அதிர்ச்சி .
தான் முதலமைச்சராக பதவி வகித்தபொழுது , அனைத்து மக்களும் கல்வி கற்க வசதியாக மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத்திறந்தது மட்டுமின்றி , தமிழகம் முழுவதும் 17000 பள்ளிகளை நிறுவினார்.
ஏழை மாணவர்களின் நலனுக்காக இலவச மதிய உணவுத்திட்டம் , இலவச சீறுடைத்த திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். இதனால் ஆங்கிலேயர் காலத்தில் 7% ஆக இருந்த கல்விகற்போர் எண்ணிக்கை , காமராஜர் காலத்தில் 37% ஆக உயர்ந்தது.
இதனால் அவர் ‘ கல்விக்கண் திறந்த காமராஜர் ‘ என்று போற்றப்படுகிறார்.
தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை உயர்த்தவும் , வெளிவாய்ப்புக்களைப் பெருக்கவும் நெய்வேலி நிலக்கரித்த திட்டம் , பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, திருச்சியில் பாரத் ஹேச்வய் எலக்ட்ரிகல் , கல்பாக்கம் அணுமின் நிலையம் , ஊட்டியில் ஹிந்துஸ்தான் கச்சா பிலிம் தொழிற்சாலை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரின்டர் ஆகிய பெரும் நிறுவனங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். மேலும் சிறு – குறு தொழில் வளர்ச்சிக்காக பல இடங்களில் தொழிற்பேட்டைகளை நிறுவினார்.
,
,அடுத்து விவசாய வளர்ச்சிக்கு பாசன வசதிக்காக , மேட்டூர் கால்வாய் திட்டம், பவானி அணைத்திட்டம், காவேரி டெல்டா திட்டம், மணிமுத்தாறு அணை , அமராவதி அணை, வைகை அணை , கிருஷ்ணகிரி அணை, ஆரணியாறுஅணை போன்ற திட்டங்களை நிறுவினார்.
இவ்வாறு கல்வி , தொழில் , விவசாயம் என்ற மூன்று துறைகளையும் முன்னேற்றிய காமராஜரை மக்கள் ‘ கர்ம வீரர்’ என்று அடைமொழி தந்து அழைத்தனர்.
1962ல் காங்கிரஸ் வலுவிழந்து வருவதை உணர்ந்த காங்கிரஸ் அக்ராசனர் காமராஜர் , K PLAN என்ற ஒரு திட்டத்தின் மூலம் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் , தங்கள் பதவியை உதறிவிட்டு , காட்சிப்பணியில் ஈடுபடவேண்டும் என்ற திட்டம் கொண்டுவந்தார். அதனடிப்படையில் , தனது முதலமைச்சர் பதவியைத் துறந்து 1963ல் பகதவச்சலம் அவர்களை தமிழக முதல்வராக்கினார்.. பதவி ஆசை இல்லாத பெருந்த்தலைவரான இவரை வடநாட்டினர் ‘ கருப்பு காந்தி என்ற பொருள் பட காலா காந்தி என்றழைத்தனர்.
1964ல் ஜவஹர்லால் நேரு அவர்கள் மறைந்தபொழுது அவருக்குப்பின் யார் என்ற குழப்ப நிலை கட்சியில் நிலவியபோது சிறந்த காந்தியவாதியும் , நேர்மை , எளிமை ஆகிய உயர் பண்புகள் கொண்ட லால் பகதூர் சாஸ்திரி அவர்களை பிரதமாராக்கினார்.
அடுத்து 1966ல் சாஸ்திரி அவர்கள் மறைந்தபொழுது காமராஜர் பிரதமாராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது , நேரு அவர்களின் மக்கள் இந்திராகாந்தியை முன்மொழிந்து பிரதமராக்கினார்.
இதனால் இவர் இந்திய அரசியலில் கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்டார்.
பதவிப்பற்று , பணப்பற்று , அதிகாரப்பற்று இவை எதுவுமின்றி , மக்கள் நலனும் . தேசப்பற்றுமே பிரதானம் என்று அரசியல் துறைவியைப் போல் எளிமையாக வாழ்ந்த காமராஜர் 1975 அக்டோபர் 2ம் நாள் , தனது மானஸீகத் தலைவர் காந்தி பிறந்த தினத்தன்று உயிர் நீத்தார்.
அவர் இருந்தபொழுது அவரிடம் இருந்தது ரொக்கம் 130 , 2 ஜோடி காலணிகள், 4 ஜோடி வேஷ்டி – சட்டைகள் , சில புத்தகங்கள் மட்டுமே.
சிறு குறிப்புகள் ;
1. நெய்வேலி நிலக்கரித்திட்டம் 150 கோடி , ஆண்டுக்கு 50 கோடி .
2. ஆயுத தளவாடங்கள் தருவிக்க அமெரிக்க மறுப்பு. நேருவுக்கு ஆலோசனை.
3. அரசு சாதனை விளக்கப்படம் எடுக்க எதிர்ப்பு.
4. , அரசு mla விடுதி பணியார்களுக்கு கல்வி நிர்ணயம்.
5. கேரளாவிலிருந்து தண்ணீர் தருவிக்க நம்பூதிரி பாடுடன் பேசியது.