முதுகுளத்தூரில் ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 400 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் தங்களின் கோரிக்கையான தேசிய தலைவர்கள் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களையும் சுதந்திர போராட்ட வீரர் ஆன்மீகவாதி பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் அவர்களையும் நெல்லையில் நடந்த பொது கூட்டத்தில் செந்தில் ராஜன் என்பவர் இழிவாக பேசியதை கண்டித்தும், அந்த நபரை உடனே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வழியுறுத்தியும் போலீசாரின் தடையை மீறி முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கனக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் பேரணியாக சென்று பேருந்து நிலையம் அருகிலுள்ள தேவர் சிலையை அடைந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆப்பநாடு மறவர் சங்க நிர்வாகிகள், அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் சுரேஷ் தேவர், பசும்பொன் தேசிய கழகம் ஜோதி முத்துராமலிங்கத்தேவர் ,பிஎம்டி தலைவர் இசைக்கிராஜா மற்றும் கணேஷ் தேவர் , பவானி வேல்முருகன் , பார்வர்ட் ப்ளாக் வீரப்பெருமாள் , மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.
இருந்த போதும் ஆயிரக்கணக்கானோர் தேவர் சிலை அருகில் கூடியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது அப்போது
போராட்ட காரர்களுடன் மாவட்ட எஸ்பி சந்தீஷ் பேச்சு வார்த்தை நடத்தினார். செந்தில் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்ட காரர்கள் கலைந்து சென்றனர்.