தலைவரின் ஆணையை நிறைவேற்றிய தொண்டர்…!
உஹதுப் போர்க்களம்.
அன்றைய யுத்தம் இஸ்லாமிய சேனைக்கு பலத்த இழப்பு.
இச் சமயம் எதிரிப் படையிலிருந்து இருவர் வேகமாக இஸ்லாமிய முகாமை நோக்கி வெறி கொண்டவர்களாக ஆயுதங்களோடு விரைவாக வந்து கொண்டிருந்தனர்.
இதனை அண்ணல் நபிகளார்(ஸல்) அவர்கள் கவனித்து விட்டார்கள்.
உடனே அருகிலிருந்த ஸஅத் பின் அபி வக்காஸ்(ரலி) அவர்களிடம் ஸஅதே அவர்களை நோக்கி அம்பை எய்துவீராக என்றார்கள்.
ஸஅத் (ரலி) அவர்கள் அப்போதுதான் யுத்தத்தில் அம்புகள் முழுவதையும் உபயோகித்து கை வசம் அம்பு எதுவுமின்றி நின்று கொண்டிருந்தார்.
இச் சமயம் அண்ணலார்(ஸல்) உத்தரவு வந்ததும் சற்றும் யோசிக்காமல் யுத்தம்
நடை பெற்ற தரையை நோட்டமிட்டார்.
உபயோகித்து உடைந்து போன இரண்டு அம்புகள் கீழே கிடந்தன.
ஒரு வினாடியும் தாமதிக்காமல் உடைந்த அவ் விரு அம்பையும் எடுத்து வில்லில் பூட்டி அவ் விரு எதிரிகளை நோக்கி எய்தார்.
அங்கு மிகப் பெரும் அதிசயம் நடைபெற்றது.
கூர்மையான அம்பு பாய்ந்தது போல இரு எதிரிகளும் வீழ்ந்து மடிந்தனர்.
பின்னர்
ஸஅத் பின் அபி வக்காஸ்(ரலி) கூறினார்.
என்னிடம் அம்புகள் இல்லை.
அச் சமயம் அண்ணலாரின்(ஸல்) உத்தரவு வருகிறது
அந்த இரு எதிரிகளை நோக்கி அம்பை எய்துங்கள் என.
தலைவர் உத்தரவிடுகிறார்கள்
அதுவும்
இறைவனின் தூதர் அவர்
எனவே நான் அந்த உத்தரவை சற்றும் தாமதிக்காமல் உடைந்த அம்பைக் கொண்டு செயல்படுத்தினேன்.
இறைவன் அருளால் வெற்றி கிடைத்தது.
பிறகு அண்ணலார்(ஸல்) அவர்கள் எனக்காக இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்
இறைவா இவரது பார்வையை கூர்மையாக்கிடு என.
இந்த நபித்தோழர் பிற் காலங்களில் ஏராளமான போர்களில் கூர்மையான பார்வையின் காரணமாக இலக்கு நோக்கி அம்பெறிந்து பெரும் வெற்றிகளை சுவைத்தார்கள் என்பது வரலாறு…!