மீனவர் குடும்பத்திற்கு எம்எல்ஏ நேரில் ஆறுதல்
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே நாலுபனை பகுதியைச் சேர்ந்த மீனவர் முகிலன். கடந்த சில தினங்களுக்கு முன் மீன் பிடிக்கச் சென்ற இவர் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து இறந்தார்.
அவரது இல்லத்திற்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சென்று ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதி பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.