மாற்றுத்திறனாளி வீரர்கள் விழிப்புணர்வு பயணம்

Block 1 Featured News Uncategorized இராமநாதபுரம்

இராமேஸ்வரம் :

மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்களின் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் அங்கீகாரம், இட ஒதுக்கீடு போன்ற காரணங்களை வலியுறுத்தி ஒரு விழிப்புணர்வு பயணமாக மாற்றுத்திறனாளி வீரர்கள் ஐந்து பேர் கொண்ட குழு டெல்லியில் இருந்து 14-12-2024 பிற்பகல் 1.00 மணிக்கு பயணத்தை துவங்கி 12 மாநிலங்களை கடந்து இன்று 25-12-2024 தனுஷ்கோடிக்கு பிற்பகல் 12 மணிக்கு வந்து சேர்ந்தார்கள்.

மாற்றுத்திறனாளி வீரர்களை ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர், கழக நகர் செயலாளர் நாசர் கான் அவர்கள் மாலை அணிவித்து வரவேற்றார். இந்த சாதனை பயத்திற்காக அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக விருது வழங்கப்பட்டது .

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான தங்குமிடம் உணவு மற்றும் அனைத்து உதவிகளையும் தொழிலதிபர் திரு மாரிமுத்து VP sea foods அவர்கள் வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர் நாசர் கான் அவர்களுக்கு இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி பொன்னாடை போர்த்தி கேடயத்தை வழங்கி கௌரவித்தார்.

மீண்டும் தனுஷ்கோடியில் இருந்து சிறப்பு விருந்தினர் நாசர் கான் நகர மன்ற தலைவர் மற்றும் அப்பாஸ் அலி இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் கொடியசைத்து மீண்டும் பயணத்தை தொடங்கி வைத்தனர் . பாண்டிச்சேரி வழியாக மீண்டும் டெல்லியை நோக்கி சென்று கிட்டத்தட்ட 6000 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கிறார்கள். மாற்றுத்திறனாளி வீரர்கள் கல்வி,விளையாட்டு போன்றவற்றில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் சிறப்பு விருந்தினராக கராத்தே பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பாபா முருகன் 16வது வார்டு கழக பொறுப்பாளர் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *