துபாய் நகரில் படித்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு
துபாய் :
துபாயில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களில் படித்து தமிழகத்தைச் சேர்ந்த திருநெல்வேலி அரிகேசவநல்லூர் ஆலியா ருமானா தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஃபாத்திமா ஹனா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியிலும், கார்த்திக் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்தனர்.
அவர்களை பாராட்டி நீட்’ தனியார் பயிற்சி நிறுவனம் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தது. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.