கோலம் பழக்குவதற்கான பயிற்சி நூல் அமேசானில் கேட்பு அச்சு(POD) நூலாக அறிமுகம் ஆகியுள்ளது. இது கணிதக் கணிப்புகளால் கோலம் வரையும் மென்பொருளான கோலசுரபியின் வெளியீடாகும். இதில் தடம்பார்த்து வரைந்தோ, விடுபட்ட புள்ளிகளை இணைத்தோ, வண்ணம் தீட்டியோ பழகலாம். விருப்பமுள்ள குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். கணிதமும் கற்பனையும் நிறைந்த கோலங்கள் அவர்கள் மனதை வண்ணமயமாக்கும்.