மட்டன் மந்தி பிரியாணி செய்வது எப்படி
மந்தி மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் :
✍️1 தேக்கரண்டி மல்லி
✍️1/4 தேக்கரண்டி மிளகு
✍️1/2 டீஸ்பூன் சோம்பு
✍️1/2 டிஸ்பூன் சீரகம்
✍️1 ஜாதி பத்திரி
✍️1 இலவங்கம்
✍️1 பட்டை
✍️2 பிரியாணி இலை
✍️1/4 ஜாதிக்காய்
✍️1 நட்சத்திரம் பூ
✍️4 ஏலக்காய்
பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் :
✍️ஒரு கிலோ பாஸ்மதி அரிசி
✍️வெங்காயம்
✍️இஞ்சி பூண்டு விழுது
✍️பச்சை மிளகாய்
✍️மிளகு
✍️காய்ந்த லெமன்
✍️உப்பு
✍️மஞ்சள் தூள்
✍️பாதாம் பருப்பு
✍️முந்திரி பருப்பு
✍️உலர் திராட்சை
📝 மந்தி மசாலா பொருட்களை ஒரு வானிலையில் எண்ணெய் சேர்க்காமல் ட்ரை ரோஸ்ட் செய்து மிக்ஸி ஜாரில் மாற்றி பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
📝இரண்டு பெரிய மட்டன் துண்டை ஒரு பிளேட்டில் எடுத்து வைக்கவும் அதில் அரைத்த பவுடர் மசாலா ஒரு டீஸ்பூன் லெமன் ஜூஸ் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
📝ஒரு குக்கரில் ஊற வைத்த மட்டன் துண்டுகள் காயிந்த லெமன் அரைத்த மந்தி மசாலா பவுடர் ஒரு டீஸ்பூன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேக விடவும்
📝வேக வைத்த மட்டன் துண்டை எடுத்து ஒரு பானில் நெய் சேர்த்து அதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு பக்கமும் இந்த மசாலாவில் ரோஸ்ட் செய்து வைக்கவும்
📝ஒரு குக்கரில் தேவையான அளவு நெய் சேர்த்து அதில் கொஞ்சம் மிளகு பச்சை மிளகாய் நறுக்கி வைத்திருந்த ஒரு வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும் அதில் வேகவைத்த மட்டன் தண்ணீரை சேர்க்கவும் இப்பொழுது ஊற வைத்த ஒரு கிலோ பாஸ்மதி அரிசி சேர்க்கவும் ( 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் )
📝ஒரு மூடி போட்டு வேக வைக்கவும் 5 நிமிடம் வெந்ததும் மீண்டும் மூடியை திறந்து அரிசியை கிளறி விட்டு அதில் மிளகாய்த்தூளுடன் ரோஸ்ட் செய்து வைத்திருந்த மட்டன் துண்டுகளை மேலே வைக்கவும் அதில் காய்ந்த லெமன் சேர்க்கவும்
📝அதில் ஒரு சின்ன கிண்ணத்தில் சூடான அடுப்பு கரி துண்டை சேர்த்து ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து மூடி போட்டு மூடி பத்து நிமிடம் தம் வைக்கவும்
📝பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்து அதில் நெய்யில் வறுத்த கருப்பு திராட்சை பாதாம் முந்திரி சேர்த்து சூடாக பரிமாறவும்
📝அரேபியன் மட்டன் மந்தி தயார்