சிவகெங்கை
சிவகெங்கை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரை இழிவாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்தும், உத்திரபிரதேசத்தில் ஆறு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சுட்டுக்கொன்ற காவல்துறையை கண்டித்தும், பள்ளிவாசலை அபகரிக்கும் முகமாக ஆய்வு நடத்துகிற உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை கண்டித்தும், வக்ஃபு சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் மத்திய அரசை கண்டித்தும் ஆகிய நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகெங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஹாஜி ஹைதர் அலி அம்பலம் தலைமை ஏற்றார் மாவட்ட செயலாளர் முகமது காசிம் மாவட்ட பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ் மாவட்ட துணைத் தலைவர் பிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் இனாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
திருப்பத்தூர் நகரத் தலைவர் முகமது அக்ரம் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை மாவட்ட அரசு காஜி முஹம்மது பாரூக் ஆலிம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மதுரை அவதா காதர், மாநில துணை செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட உலமா அணி அமைப்பாளர் காஜா முயீனுதீன் ஆலிம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் வியாபார பெருமக்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மஹபூப் பாஷா மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி செயளளர். காதர் உசேன் உசிலம்பட்டி தொகுதி செயலாளர் , & IT wing Mohammed Shabir khan ,மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் முகமது மணிப்புறா நன்றியுரை ஆற்றினார்.துவாவுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.