பரமக்குடியில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஷரீஅத் விளக்க கூட்டம், வாழ்வியல் பயிலரங்கம் மற்றும் ஆலிம்களை கவுரவிப்பது ஆகிய முப்பெரும் விழா
டாக்டர் எம். சதீதுத்தீன் பாகவி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்
பரமக்குடி :
பரமக்குடியில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கீழப்பள்ளிவாசல் வளாகத்தில் ஷரீஅத் விளக்க கூட்டம், வாழ்வியல் பயிலரங்கம் மற்றும் ஆலிம்களை கவுரவிப்பது ஆகிய முப்பெரும் விழா நடக்கிறது.
இளைஞர்களுக்கான பயிலரங்குக்கு பார்த்திபனூர் ஜூம் ஆ பள்ளிவாசல் தலைமை இமாம், வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எஸ். முஹம்மது ஜாபர் அலி ரஷாதி தலைமை வகிக்கிறார்.
இன்றைய இளைய சமுதாயத்தின் பருவமும் ! பார்வையும் !! என்ற தலைப்பில் சென்னை, அடையாறு, குராசானி பீர் மஸ்ஜித், தலைமை இமாம் டாக்டர் எம். சதீதுத்தீன் பாகவி சிறப்பரை நிகழ்த்துகிறார்.
இரண்டாவது அமர்வுக்கு மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஹெச். முஹம்மது ஜலாலுதீன் அன்வாரி தலைமை வகிக்கிறார்.
பார்திபனூர் இமாம் மௌலவி எஸ். முஹம்மது ஜாபர் அலி, பரமக்குடி கீழப்பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். ஜலாலுத்தீன் மன்பயீ, எமனேஸ்வரம், தலைமை இமாம் மௌலவி எம். அப்துல் வஹ்ஹாப் மிஸ்பாஹி, மாவட்ட உலமா சபை பொதுக்குழு உறுப்பினர் மௌலவி ஏ. முஹைதீன் பாட்சா, உதயகுடி இமாம் எஸ்.ஹெச். சேகனா இஸ்மாயில், உலையூர் இமாம் எம். பாவா மைதீன், பரமக்குடி மௌலவி பி.எம். முஹம்மது யாசீன் பாகவி, மௌலவி எஸ். அக்பர் பாதுஷா மன்பயீ உள்ளிட்டோர் மார்க்க பணிகளுக்காக விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.
அலட்சியப்படுத்தப்படும் ஷரீஅத் சட்டங்கள் !! என்ற தலைப்பில் சென்னை, அடையாறு, குராசானி பீர் மஸ்ஜித், தலைமை இமாம் டாக்டர் எம். சதீதுத்தீன் பாகவி சிறப்பரை நிகழ்த்துகிறார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பங்கேற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.