இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் உலக ஆசிரியர் நாள் விழா மற்றும் நூல்களின் திறனாய்வு நிகழ்ச்சி மருத்துவர் திருமதி மதுரம் அரவிந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
உமா மகேஸ்வரி மாரிமுத்து வரவேற்புரை வழங்கினார். ஏற்றி விடும் ஏணிப்படிகள் என்னும் தலைப்பில் பரமேஸ்வரி தமிழ்வாணன் அவர்களும்
ஆசிரியர் என்பவர்… என்னும் தலைப்பில் பேராசிரியர் க.செந்தில் குமார் அவர்களும் உரை நிகழ்த்தினர்.
வி. நாகஜோதி எழுதிய இதயம் தொடும் உதய கீதங்கள் என்கிற கவிதை நூலினை கவிஞர் கு ரா அவர்களும்
நீ சு பெருமாள் எழுதிய ஆன்மிகத் தளத்தில் புரட்சியாளர்கள் என்னும் நூலிற்கு இராமநாதபுரம் முகவை முத்தமிழ் மன்றத் தலைவர் மானுடப்பிரியன்அவர்களும் ஆய்வுரை வழங்கினர்.
பின்னர் வரம் தரும் வலம்புரி ஜான் என்கிற தலைப்பில் கே செந்தில் குமார் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் தமிழரசி உதயக்குமார் நடுவராக பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.