சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி
சாகாமல் காக்கும் மருந்து
அமுதம் என்றார்கள் !
அமுதம் நாங்கள் பார்தது இல்லை !
அமுதம் நாங்கள் பருகியது இல்லை !
அமுதம் தேவர்களுக்கு கடவுள்வழங்கியதாக
அன்று புராணக்கதை கதைத்தது !
இன்பமாக வாழ வேண்டுமா ?
இனிய தமிழ் படியு்ங்கள் !
துன்பம் தொலைய வேண்டுமா ?
தீ்ந்தமிழ் படியு்ங்கள் !
சோகங்கள் ஒழிய வேண்டுமா?
சந்தத்தமிழ் படியு்ங்கள் !
கவலைகள் போக வேண்டுமா?
கற்கண்டுத்தமிழ் படியு்ங்கள் !
விரக்தி நீங்க வேண்டுமா ?
வளம் மிக்க தமிழ் படியு்ங்கள் !
ஒழுக்கமாக வாழ வேண்டுமா ?
ஒப்பற்றத் தமிழ் படியு்ங்கள் !
பண்பாடாக வாழ வேண்டுமா ?
பைந்தமிழ் படியு்ங்கள் !
நெறிகளை அறிந்திட வேண்டுமா ?
நிதமும் தமிழ் படியு்ங்கள் !
வீரம் அறிந்திட வேண்டுமா ?
விவேகத்தமிழ் படியு்ங்கள் !
சாதி மத வெறி அகற்ற வேண்டுமா?
சீர்மிகு தமிழ் படியு்ங்கள் !
மனிதம் மலர்ந்திட வேண்டுமா ?
மயக்கும் தமிழ் படியு்ங்கள் !
முத்திரை பதிக்க வேண்டுமா ?
முதல்மொழி தமிழ் படியு்ங்கள் !
கற்பனைத்திறன் வேண்டுமா ?
கனித்தமிழ் படியுங்கள் !
சுயமாகச் சிந்திக்க வேண்டுமா ?
சுந்தரத்தமிழ் படியுங்கள் !
வாழ்வியலை உணர வேண்டுமா ?
வற்றாதத் தமிழ் படியுங்கள் !
மனிதன் மனிதனாக வாழ வேண்டுமா ?
முத்தமிழ் படியு்ங்கள் !
மரணத்திற்கு மரணம் தர வேண்டுமா ?
மாண்புமிகு தமிழ் படியு்ங்கள் !
இறப்புக்கு இறப்பு தர வேண்டுமா ?
இனிமையான தமிழ் படியு்ங்கள் !
சாகாமல் வாழ வேண்டுமா ?
சங்கத்தமிழ் படியு்ங்கள் !
சாகாமல் காக்கும் மருந்து தமிழ் !
சாதாரணம் தமிழ் முன் அமுதம் !