வெங்கலக்குறிச்சி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் & நிறைவு விழா

முதுகுளத்துார்

ஏழாம் நாள்: அக்டோபர் 4, 2024 (வெள்ளிக்கிழமை)
கால்நடை மருத்துவ முகாம் & நிறைவு விழா

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. நிறைவு நாளான இன்று 04.10.2024 வெள்ளிக்கிழமை கால்நடை மருத்துவ முகாம் & நிறைவு விழா நடைபெற்றது.

ஏழாம் நாள் (04.10.2024 ) மற்றும் நிறைவு விழாவிற்கு முதுகுளத்தூர் கால்நடை உதவி மருத்துவர், டாக்டர் மு வினிதா B.V.Sc., & A.H சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நட்டு நலப்பணித்திட்டதின் சார்பாக கால்நடை மருத்துவ முகாமை நடத்தினார்கள். இந்த விழாவிற்கு வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பானுமதி முருகவேல் , ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் அவர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் பானுமதி முருகவேல் அவர்கள் ஊராட்சி மன்ற செயலாளர் பொன்மணி கிராமத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் முன்னிலை வகித்தார்கள். இவ்விழாவிற்கு ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் அவர்கள் சார்பாகவும் கிராமத்தின் சார்பாகவும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்கள். அதன் பிறகு கால்நடை மருத்துவர் அவர்கள் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களுக்கு கால்நடை மருத்துவ முகாமின் நோக்கங்களையும் அதன் சிறப்புகள் பயன்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறி மருத்துவ முகாமை தொடங்கினார்கள். கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள். இதில் கிராம பொது மக்கள் அனைவரும் தங்கள் கால்நடைகளுடன் கலந்து பயன் பெற்றனர். இம்முகாமில் 40 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு காணை நோய், குடற்புழு நீக்கம், உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தார். பசு மாடுகளுக்கு சினை பரிசோதனை செய்தார்.

நிறைவு விழா நன்றியுரை
இறுதியாக பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் இடைநிலை பட்டதாரி ஆசிரியர் கண்ணன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் மு.சாகுல்ஹமீது அவர்களுக்கும் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி அவர்களுக்கும், சிறப்பு முகாமை துவக்கி வைத்த முதுகுளத்தூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு.சின்னக்கண்ணு அவர்களுக்கும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர் சண்முகப்பிரியா ராஜேஷ் அவர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர் பா அன்பு கண்ணன் அவர்களுக்கும் வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் அவர்களுக்கும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பானுமதி முருகவேல் அவர்களுக்கும் , ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் அவர்களுக்கும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் பானுமதி முருகவேல் அவர்களுக்கும் ஊராட்சி மன்ற செயலாளர் பொன்மணி அவர்களுக்கும் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் எம் எம் கே எம் காதர் முகைதீன் அவர்களுக்கும் கல்விக் குழு தலைவர் செய்யது மூமின் அவர்களுக்கும் வெங்கலகுறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம்.சேதுராமு அவர்களுக்கும், வெங்கலகுறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஆலீஸ் அவர்களுக்கும், சிறப்பு முகாம் நடைபெற்ற 7 நாட்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அனைவருக்கும் கிராம முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் அணைத்து சமுதாய பெரியவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கிராம இளைஞிகள், இளைஞர்கள் தாய்மார்கள் கிராம முதியோர்கள் துப்புரவு பணியாளர்களுக்கும் அணைத்து பத்திரிக்கை வகை ஊடக நண்பர்களுக்கும், காவல்துறைக்கும், பள்ளியின் பட்டதாரி, முதுகலை பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர்களுக்கும் அனைத்து இருபால் ஆசிரிய பெருமக்களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும், பள்ளியின் காவலர் அவர்களுக்கும் பள்ளியின் மாணவ மாணவிகளுக்கும் நாட்டுக்கு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கும் திட்ட அலுவலர் நூருல் அமீன் அவர்களுக்கும், அனைவருக்கும் பள்ளியின் நிர்வாகம் சார்பாக தங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்கள் இனிதே விழா நிறைவடைந்தது. விழாவிற்கான அணைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *