மதிவதனி அர்ஜுன் சம்பத் மோதல்…
மதிவதனி பார்ப்பான் என்று சாதியைச் சொல்லி கேவலப்படுத்துகிறார் என்று பொது வெளியில் தொலைக்காட்சியின் விவாத அரங்கில் அடிக்கப் போகிறார் அர்ஜுன் சம்பத். பாவம்… பரிதாபமாக உள்ளது அர்ஜீன் சம்பத்தின் நிலை…
பார்ப்பான் என்று மதிவதனி சொன்னதற்கு எப்படி அந்த வார்த்தையை பயன்படுத்தலாம் என்று அடிக்கப் பாய்கிறார்.
நல்ல வேலை திருவள்ளுவர் இப்போது உயிருடன் இல்லை வேதம் ஓதுபவரை திருவள்ளுவர் பார்ப்பான் என்று தான் பதிவு செய்திருக்கிறார்.
மறப்பினும் ஒத்துக்
கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்… (134)
வேதங்களை பார்ப்பான் மறந்துவிட்டால் மறுபடியும் கற்றுக் கொள்ளலாம் ஆனால் ஒழுக்கம் கெட்டால் அவன் பிறப்பே நாசமுறும் என்கிறார் திருவள்ளுவர்.
முண்டாசுக் கவி பாரதி பார்ப்பனர் குலத்தில் பிறந்தவர் தான்… அவர் இப்படிச் சொல்கிறார்…
சூத்திரனுக்கு ஒரு நீதி! – தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி! என சாத்திரம் சொல்லிடுமாயின் -அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்…!!!
இதைவிட நெருப்பு வார்த்தைகளைக் கொண்டு மதிவதனி மேடையில் அங்கே பேசவில்லை. இப்போது அர்ஜுன் சம்பத்திடம் ஒரு கேள்வி… திருவள்ளுவரையும் பாரதியையும் என்ன செய்யப் போகிறீர்கள்??
மதிவதனியை நோக்கி காலனியை காண்பித்த காவி கட்டிய மாவீரர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்??
நீ சு பெருமாள்.
பரமக்குடி.