ஆறாம் நாள் நாள்: அக்டோபர் 3, 2024 (வியாழக்கிழமை)
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது.
ஆறாம் நாள் நிகழ்வான இன்று 03.10.2024 சுற்றுசூழல் விழிப்புணர்வு & மரம் நடுதல் (03.10.2024) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் தலைமை வகித்தார்,
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பானுமதி முருகவேல் , ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் அவர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் பானுமதி முருகவேல் அவர்கள் ஊராட்சி மன்ற செயலாளர் பொன்மணி வெங்கலக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி இளநிலை உதவியாளர் ராம்ராஜ் ஆகியோர் முன்னனிலை வகித்தனர்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளியின் தேசிய பசுமைப்படையின் ஒருங்கினைப்பாளர் பட்டதாரி ஆசிரியர் திரு. அ. நாசர் அவர்களுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் அவர்கள் சார்பாக ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்கள். அதன் பிறகு சிறப்பு விருந்தினர் அவர்கள் சுற்றுசூழல் விழிப்புணர்வு & மரம் நடுதல் பற்றி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துரைத்தார்கள்.
சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளையோ அல்லது உயிரினத்தையோ சுற்றியுள்ள இயற்கைச் சூழலைச் குறிக்கின்றது. அதாவது உயிரினங்களும் அவை வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவையும் அடங்கிய இயற்கை அமைப்பு சுற்றுச்சூழல் ஆகும்.
இயற்கையமைப்பில் அமைந்துள்ள அனைத்து உயிரினங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செலுத்துகின்றன. ஆறறிவு பெற்ற மனிதன் மட்டும், தன்னை தன் சுய லாபத்திற்காக இயற்கையாய் அமைந்துள்ள அனைத்தையும் வரைமுறை இல்லாமல் அழிக்கத் தொடங்கிவிட்டான். அதன் விளைவாக மனித சமூகம் இன்று சுனாமி, புவி வெப்பமடைதல், ஓசோன் படலத்தில் ஓட்டை என பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவுப்பொருள்களால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. காற்று மாசு படுகிறது. காடுகளும் காடுகளில் காணப்படும் மரங்களும் வியாபார நோக்கத்தில் அழிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக, மழை பொய்த்து போயின. பருவநிலை மாறி உள்ளது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
மரம் நடுதல் ஆகியவற்றின் மூலம் சுற்றுப்ப்புறத்தை பாதுகாக்கலாம்
“ சுவாசிக்கும் மக்கள் அனைவரும் மரம் நட வேண்டும்”
“மரங்கள் தான் மனிதர்களின் நுரையீரல். நம்மை நாம் காத்து கொள்ள வேண்டுமென்றால், மரங்களை காப்பது அவசியம்”
மரங்கள் வெளிவிடும் காற்றை, நாம் சுவாசிக்கிறோம்; நாம் வெளிவிடும் காற்றை, மரங்கள் சுவாசிக்கின்றன. அந்த வகையில், மரங்கள் தான் நம் நுரையீரலாக செயல்படுகின்றன. நுரையீரலை பாதுகாப்பது நமது கடமை இல்லையா? அந்த வகையில், நம்மை நாம் காத்துக் கொள்ள, மரங்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்கள். கிராம முக்கிய வீதிகளில் மரக்கன்றுகளை நட்டார்கள். மேலும் கிராம பொதுமக்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக மரக்கன்றுகளை வழங்கினார்கள். மேலும் ஊர் பொது மக்கள் இளைஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதன் பின்னர் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் வெங்கலக்குறிச்சி கிராமத்தின் முக்கிய இடங்களில் மரகன்றுகளை நட்டு வேலி அமைத்தார்கள். இறுதியாக ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். அதன்பிறகு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உழவார பணிகளில் ஈடுபட்டார்கள். இந்த நிகழ்வுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்.