நான்காம் நாள் : அக்டோபர் 01, 2024 (செவ்வாய்கிழமை )
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. நான்காம் நாள் நிகழ்வான இன்று 01.10.2024 திடக்கழிவு மேலாண்மை – இயற்கை உரம் விழிப்புணர்வு & மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பானுமதி முருகவேல் , ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் அவர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் பானுமதி முருகவேல் அவர்கள் ஊராட்சி மன்ற செயலாளர் பொன்மணி அவர்கள் ஆகியோர் முன்னனிலை வகித்தனர்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். அதனை தொடர்ந்து முதுகுளத்தூர் பேரூராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் (திடக்கழிவு மேலாண்மை) எஸ் கண்ணன் அவர்களுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் அவர்கள் சார்பாக ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்கள்.
அதன் பின்னர் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கும், கிராம பொது மக்களுக்கும் திடக்கழிவு மேலாண்மை பற்றியும் அதன் பயன்பாடு நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் மூலம் மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் நிகழ்வு , மக்கும் குப்பைகளிலிருந்து கிடைக்கும் உரம் தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்பட்டு மண்வளத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. தேவையில்லை என்று வெளியே போடும் கழிவுப்பொருள்களில் எரியக் கூடிய திடக்கழிவுகளை பிரித்து அதற்கெனதேவையில்லை என்று வெளியே போடும் கழிவுப்பொருள்களில் எரியக் கூடிய திடக்கழிவுகளை பிரித்து அதற்கென தொழில்நுட்பத்தின் வழியாக வடிவமைக்கப்பட்ட எரியூட்டி (உலைகள்) மூலம் எரித்துச் சாம்பலாக மாற்றலாம். எரிக்கபடும் போது வெளிப்படும் அதிக வெப்பம் நோய் தொற்றுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. மேலும் இந்த வெப்பத்தினைப் பயன்படுத்தி மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகின்றது, என்பதையும், இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்களின் மூலம் ஏற்படும் தீமைகளையும் அதன் குறைபாடுகளையும் விளக்கி இன்றைய காலகட்டத்தில் மீண்டும் மஞ்சள்பை பயன்படுத்த வேண்டிய தேவையையும் அதன் அவசியத்தையும் எடுத்து கூறி விளக்கினார்கள். மீண்டும் மஞ்சள்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இறுதியாக ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் அவர்கள் நன்றி கூறினார்கள். இதில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் எழுத்தர் தாகீர் ஹுசேன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மேலும் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு மஞ்சள் பை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
மேலும் ஊர் பொது மக்கள் இளைஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதன் பின்னர் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் வெங்கலக்குறிச்சி கிராமத்தின் முக்கிய வீதிகளில் சென்று பொது மக்களிடம் மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அதன்பிறகு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டார்கள். இந்த நிகழ்வுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். உழவார பணிகளில் ஈடுபட்டனர்.